Posts

Showing posts from March 11, 2011

சிந்தனைக்கு...

Image
நமக்குள் இருக்கும் சந்தோஷமானது, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளையும் நம்பிக்கை உடையதாக மாற்ற வல்லது. சிந்திக்க வேண்டிய கருத்து: நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது அதன் சக்தியானது, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில்கூட உங்களை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைக்கின்றது. இந்த நிலையை நீங்கள் பராமரிக்கும் போது சூழ்நிலை சிறந்ததாக மாறுவதை காண முடியும். உங்களுடைய நம்பிக்கை சூழ்நிலையை மாற்றமடைவதற்கு துணை புரிகின்றது. செயல்முறை: நீங்கள் சந்தோஷமற்ற ஒரு சூழ்நிலையை சிந்திக்கவும். சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்க்காமல் அதை அப்படியே ஏற்று கொள்ள முடிகின்றதா என பார்க்கவும். இவ்வாறு நீங்கள் ஏற்று கொள்வதால் நடப்பவை நன்மைக்காக தான் என்ற நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கையினால் நம்பிக்கையற்ற சூழ்நிலை சிறப்பானதாக மாறும்.

மகா சிவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம்

Image
மகா சிவராத்திரி விழா பாரதம் முழுவதிலும் பயபக்தியோடு கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு வில்வத்தை அற்பணம் செய்து, விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து பக்தி செய்கின்றார்கள். இந்தத் திருநாளை ஆன்மீக சிறப்பு உணர்ந்து கொண்டாடவேண்டுமேன்றால், கடவுள் சிவனைப் பற்றியும், சிவராத்திரி எதன் ஞாபகார்த்தமாக கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இராமேஸ்வரத்தில், இராமர் எப்படி சிவனை உதவிக்கு அழைத்தார் என்றும், கோப்பேஸ்வரத்தில் கிருஷ்ணர் எப்படி சிவபூஜை செய்தார் என்றும், அமர்நாத், சோமநாத், விஸ்வநாத் என்று பாரதம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற 12 ஜோதிர்லிங்கங்கள் சிவனின் திவ்விய கர்த்தவ்வியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இந்த 12 ஜோதிர்லிங்கங்களும், சிவன், கடவுளின் ரூபம் ஒளியாக இருப்பதை உணர்த்துகின்றது. சிவனுடைய லிங்க ரூபம், கடவுள் மனித ரூபத்தில் இல்லாமல், நிராகாரமாக (உடலற்றவராக) இருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. மேலும் சிவனை சுயம்பு என்று வர்ணிப்பதன் பொருள், பரமாத்மாவான அவருக்கு மேல் படைப்பவர் என்று யாருமில்லை என்பதாகும். சிவா என்ற சொல்லின் பொருள் அனைத்...