இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்
இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெயருக்கேற்ப எந்த புத்தகத்தையும் படிக்க வழி செய்கிறது இந்த தளம்.அதிலும் மிகவும் சுலபமாக,இபுக்காக. புத்தக பிரியர்களுக்காக என்று பிரத்யேக இணையதளங்கள் பல இருக்கின்றன.வெறும்னே புத்தகங்களை பட்டியலிடாமல் ரசனையின் அடிப்படையில் நமக்கு பிடிக்க கூடிய புதிய புத்தகங்களை பரிந்துரைக்கும் அருமையான தளங்களும் இருக்கின்றன. அதே போல இணையத்தில் இபுக் வடிவில் கிடைக்க கூடிய புத்தகங்களை தேட உதவும் தளங்களுமிருக்கின்றன.இலவச இபுக்களை அடையாளம் காட்டும் தளங்களையும் நீங்கள் அறீந்திருக்கலாம். ‘ரீட் எனி புக்’ தளம் இந்த இரண்டையுமே செய்கிறது. இந்த தளத்தில் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேர்வ செய்து அந்த புத்தகத்தை அப்படியே இபுக்காக படிக்கத்துவங்கி விடலாம். இதற்காக தனியே எந்த சாப்ட்வேரையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.ஏன் படிக்கப்போகும் புத்தகத்தை கூட டவுண்லோடு செய்ய வ...