14 PSD | 1280*1024 px | 47.8 mb
Letitbit
http://letitbit.net/download/62424.616d28055f6d93438ab38c8c5eda/creativebackgroundspsd.rar.html
I-Filez
http://i-filez.com/downloads/i/168465/f/creativebackgroundspsd.rar.html
இறைத்தன்மை அடைய...
இயற்கைத் தத்துவத்தையும், அதன் விளைவுகளையும் அன்றாடம் வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் விளைவுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிக் கொண்டும், சில நேரங்களில் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றோம். இதனைச் செயல் விளைவுத் தத்துவம் என்று சொல்லலாம். விதி என்றும் சொல்லலாம். தெய்வச் செயல் என்றும் சொல்லலாம். வினை அல்லது வினைப் பயன் என்றும் இதை மதிக்கலாம்.
இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத் தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்.
மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. இந்நிலையைத்தான். ஆணவம் என்பார்கள். நாம் இதனைத் "தன்முனைப்பு" (Ego) என்கிறோம்.
உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன் இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலங்குன்றியிருக்கின்றது. இதைமூடநிலை எனலாம். மூடம் என்றால் மறைவு என்று பொருள். மூடன் என்றால் அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல் அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைபட்டிருக்கும் நிலையாகும்.
தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைதத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும், சிறப்பையும் இழந்துவிடுகிறது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஜப்பானில் சுனாமி
ஜப்பானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தலைநகர் டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 அலகுகளாகப் பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பஸ்கள், ரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் அடித்துச் சென்றுவிட்டது.
கடலோரப் பகுதிகளில் மின்சாரமும் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. மியாகி மாநிலத்தில் உள்ள செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் கடல்நீர் அடித்துச் சென்றது.
நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
செண்டாய் நகரின் ஒரு பகுதியில் மட்டும் 200 முதல் 300 உடல்கள் கிடைத்திருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
அணுமின் நிலையம் எரிந்தது
கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிவதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அங்கு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஜப்பான் அரசு மறுத்திருக்கிறது. கதிர்வீச்சு ஆபத்தில்லை என சர்வதேச அணுசக்தி முகமையும் அறிவித்தது.
ஆனால், ஃபுகுஷிமா பகுதியில் உள்ள மற்றொரு அணு உலையில் குறைந்த அளவு கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கலாம் என ஜப்பான் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.
அணை உடைந்தது:
ஃபுகுஷிமா பகுதியில் உள்ள அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதாக கியோடா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 1800 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.
http://news.yahoo.com/video/world-15749633/greg-palkot-live-in-japan-24505016
சிந்தனைக்கு...
நமக்குள் இருக்கும் சந்தோஷமானது, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளையும் நம்பிக்கை உடையதாக மாற்ற வல்லது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது அதன் சக்தியானது, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில்கூட உங்களை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைக்கின்றது. இந்த நிலையை நீங்கள் பராமரிக்கும் போது சூழ்நிலை சிறந்ததாக மாறுவதை காண முடியும். உங்களுடைய நம்பிக்கை சூழ்நிலையை மாற்றமடைவதற்கு துணை புரிகின்றது.
செயல்முறை:
நீங்கள் சந்தோஷமற்ற ஒரு சூழ்நிலையை சிந்திக்கவும். சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்க்காமல் அதை அப்படியே ஏற்று கொள்ள முடிகின்றதா என பார்க்கவும். இவ்வாறு நீங்கள் ஏற்று கொள்வதால் நடப்பவை நன்மைக்காக தான் என்ற நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கையினால் நம்பிக்கையற்ற சூழ்நிலை சிறப்பானதாக மாறும்.
மகா சிவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம்
மகா சிவராத்திரி விழா பாரதம் முழுவதிலும் பயபக்தியோடு கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு வில்வத்தை அற்பணம் செய்து, விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து பக்தி செய்கின்றார்கள். இந்தத் திருநாளை ஆன்மீக சிறப்பு உணர்ந்து கொண்டாடவேண்டுமேன்றால், கடவுள் சிவனைப் பற்றியும், சிவராத்திரி எதன் ஞாபகார்த்தமாக கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இராமேஸ்வரத்தில், இராமர் எப்படி சிவனை உதவிக்கு அழைத்தார் என்றும், கோப்பேஸ்வரத்தில் கிருஷ்ணர் எப்படி சிவபூஜை செய்தார் என்றும், அமர்நாத், சோமநாத், விஸ்வநாத் என்று பாரதம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற 12 ஜோதிர்லிங்கங்கள் சிவனின் திவ்விய கர்த்தவ்வியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த 12 ஜோதிர்லிங்கங்களும், சிவன், கடவுளின் ரூபம் ஒளியாக இருப்பதை உணர்த்துகின்றது. சிவனுடைய லிங்க ரூபம், கடவுள் மனித ரூபத்தில் இல்லாமல், நிராகாரமாக (உடலற்றவராக) இருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. மேலும் சிவனை சுயம்பு என்று வர்ணிப்பதன் பொருள், பரமாத்மாவான அவருக்கு மேல் படைப்பவர் என்று யாருமில்லை என்பதாகும்.
சிவா என்ற சொல்லின் பொருள் அனைத்து ஆத்மாக்களுக்கும் நம்மை செய்வர் என்பதாகும். சிவலிங்கத்தில் இருக்கும் 3 கோடுகளின் பொருளாவது, சிவனே பிரம்மாவின் மூலம் புதிய உலகைப் படைக்கின்றார், விஷ்ணுவின் மூலம் காத்தருளுகின்றார், விகாரங்கள் மற்றும் அநீதியை பழைய உலகிலிருந்து அழிக்கின்றார் என்பதாகும். அவரே அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தியும், ஜீவன்முக்தியும் அருளுகின்றார்.
சிவராத்திரி திருவிழா, இந்த பூலோகத்தில் இருள் என்கின்ற அறியாமை நிறைந்திருக்கின்ற நேரத்தில் கடவுள் சிவன் அவதரிப்பதைக் குறிப்பதாகும். இராத்திரி என்பது ஆத்மாக்களாகிய நாம் நம்மைப் பற்றி, கடவுளைப் பற்றி மற்றும் விகாரங்கள் நிறைந்த உலகைப் பற்றி அறியாமல் இருப்பதை குறிப்பதாகும். சிவனே ஞானக்கடலாக வந்து, அறியாமையிலிருக்கும் நமக்கு சத்தியஞானம் என்ற ஒளியைக் கொடுத்து உண்மையைப் புரிய வைக்கின்றார். மதங்கள் சீர்குலைந்து போகும்போது நான் வருவேன் என்று கூரியதற்கேற்ப, தூய்மையற்ற கலியுகத்தை மாற்றி, தூய்மையான தெய்வீக சத்யுகத்தை, சொர்க்கத்தை இராஜ யோகத்தின் ஸ்தாபனம் செய்கின்றார்.
கடவுளே நம்முடைய தந்தையாக, ஆசிரியராக மற்றும் சத்குருவாக இருந்து இந்த நேரத்தில் நமக்கு வழிக்காட்டுகின்றார். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சுகம், சாந்தி நிறைந்த சொர்க்கவாசிகள் ஆகுவீர்களாக! இராஜ யோகம் பயில்வீர்களாக!
பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம்
சுயமாற்றமே, உலக மாற்றம்
பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான பயிற்சிகள் உலகம் முழுவதிலும் 120 நாடுகளில், இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
L. Kamal Nath
அறிவென்னும் ஆயுதம்...
சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்து விடும்.
மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன? எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.
எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.

Subscribe to:
Comments (Atom)