Posts

Showing posts from October 21, 2010

Torrent மூலம் இலவச பதிவிறக்கம் செய்வது எப்படி?

Image
    Torrent என்றால் என்ன? Torrent எண்பதின் மூலம் படங்கள், ஆடியோ & வீடியோ பாடல்கள், கேம்ஸ் என்று அனைத்துவிதமான கோப்புகளையும், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்க்காக தனியாக Account எதுவும் தேவையில்லை. Rapidshare-ல் பதிவிறக்கம் செய்வது போல கடிணம் அல்ல… மிகவும் எளிய வழியில், மிக பெரிய கோப்புகளையும் (Movies and Games Files) எளிதாக பெற முடியும். இவ்வாறு பதிவிறக்கம் செய்வது முற்றிலுமாக Legal ஆகும். அதனால் நம்ம இஷ்டத்துக்கு, பிடித்த படங்கள், கேம்ஸ், மின் – புத்தகங்கள் என பதிவிறக்கம் செய்யலாம். Torrent மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி? பல Torrent வலைதளங்கள் உள்ளன. இத்தகைய தளங்களுக்கு சென்று, கோப்புக்களை தேர்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் µTorrent என்ற எளிய கருவியை கொண்டு, இந்த Torrent File-களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கருவியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (Install). இதனை பெற இங்கே சொடுக்கவும்….

தகவல்களைத் திருடும் Malware

Image
மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், "இலவச தரவிறக்க வசதி" என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். Software எனப்படும் மென்பொருட்கள்தாம் நம் கணினியை இயக்கி வருகின்றன. MS Office ல் இருக்கும் Word, Excel, Power point ஐ தெரியாதவர்கள் இருக்க முடியாது. கணினியே கதி என்று இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். Flash, silverlight, photoshop, Visual Basic, Oracle, என்று சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அடங்காது. உங்களை இணையத்தில் சஞ்சரிக்கச் செய்வதும் இந்த மென்பொருட்களே. இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் மென்பொருட்களை உருவாக்குவது மனித மூளையே. உயிர் காக்கும் பென்சிலின் ஆகட்டும், தலைமுறைகளை முடமாக்கின அணுகுண்டு ஆகட்டும் இரண்டுக்குமே மூல காரணம் இந்த மூளைதான். கணினிதுறையிலும் இந்த வாதம் பொருந்தும். நாம் தினம் உபயோகிக்கும் மென்பொருட்களை ...

3D BUMP TOP

Image
3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.     விளக்கமாக இதை பார்க்கவும்: தேவையானவை: * Processor: 1.8 GHz * Memory: 1.0 GB * Video: 128 MB * Free Disk Space: 15MB * Screen resolution: 800 � 600 * OpenGL 2.0 * Internet connection * Windows XP/Vista/7 பதிவிறக்கம் செய்ய… இணைப்பு வாழ்க வளமுடன். நன்றி........... மு.இரா  

அன்பு.........

Image
அன்பு தன்னலமின்றி தருவதற்கே அன்பு உணர்ந்து குதிப்பதற்கே அன்பு அனைவருடன் பகிர்வதற்கே அன்பு என்றும் தூய்மையானதே அன்பு மகிழ்ச்சியில் துள்ளும் அன்பு வெட்கத்தில் மலரும் அன்பு அனுபவிக்க துடிக்கும் அன்பு அழிவல்ல நினைக்கும் அன்பு தருவது வலியை அன்பு திணிப்பது களிப்பை அன்பு வெல்வது நெஞ்சை அன்புக்கு தேவையில்லை மூளை   அன்பு அழகில் முதலில் மயங்கும் அன்பு செய்த மனம் தவிக்கும் அன்பு இல்லை என்றும் பாவம் அன்பு வெல்வது அல்ல விரும்பும் அன்பு உண்மையை கணிக்க தவறும் அன்பு கோபத்தையும் தூண்டும் அன்பு வயதை அல்ல காணும் அன்பே ஞானியை உருவாக்கும் அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை அன்பு இனி செல்வது சரியான பாதை அன்பு உயர பறக்க நினைக்கும் அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும் அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும் அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும் அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை