Posts

Showing posts from October, 2010

Torrent மூலம் இலவச பதிவிறக்கம் செய்வது எப்படி?

Image
    Torrent என்றால் என்ன? Torrent எண்பதின் மூலம் படங்கள், ஆடியோ & வீடியோ பாடல்கள், கேம்ஸ் என்று அனைத்துவிதமான கோப்புகளையும், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்க்காக தனியாக Account எதுவும் தேவையில்லை. Rapidshare-ல் பதிவிறக்கம் செய்வது போல கடிணம் அல்ல… மிகவும் எளிய வழியில், மிக பெரிய கோப்புகளையும் (Movies and Games Files) எளிதாக பெற முடியும். இவ்வாறு பதிவிறக்கம் செய்வது முற்றிலுமாக Legal ஆகும். அதனால் நம்ம இஷ்டத்துக்கு, பிடித்த படங்கள், கேம்ஸ், மின் – புத்தகங்கள் என பதிவிறக்கம் செய்யலாம். Torrent மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி? பல Torrent வலைதளங்கள் உள்ளன. இத்தகைய தளங்களுக்கு சென்று, கோப்புக்களை தேர்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் µTorrent என்ற எளிய கருவியை கொண்டு, இந்த Torrent File-களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கருவியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (Install). இதனை பெற இங்கே சொடுக்கவும்….

தகவல்களைத் திருடும் Malware

Image
மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், "இலவச தரவிறக்க வசதி" என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். Software எனப்படும் மென்பொருட்கள்தாம் நம் கணினியை இயக்கி வருகின்றன. MS Office ல் இருக்கும் Word, Excel, Power point ஐ தெரியாதவர்கள் இருக்க முடியாது. கணினியே கதி என்று இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். Flash, silverlight, photoshop, Visual Basic, Oracle, என்று சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அடங்காது. உங்களை இணையத்தில் சஞ்சரிக்கச் செய்வதும் இந்த மென்பொருட்களே. இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் மென்பொருட்களை உருவாக்குவது மனித மூளையே. உயிர் காக்கும் பென்சிலின் ஆகட்டும், தலைமுறைகளை முடமாக்கின அணுகுண்டு ஆகட்டும் இரண்டுக்குமே மூல காரணம் இந்த மூளைதான். கணினிதுறையிலும் இந்த வாதம் பொருந்தும். நாம் தினம் உபயோகிக்கும் மென்பொருட்களை ...

3D BUMP TOP

Image
3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.     விளக்கமாக இதை பார்க்கவும்: தேவையானவை: * Processor: 1.8 GHz * Memory: 1.0 GB * Video: 128 MB * Free Disk Space: 15MB * Screen resolution: 800 � 600 * OpenGL 2.0 * Internet connection * Windows XP/Vista/7 பதிவிறக்கம் செய்ய… இணைப்பு வாழ்க வளமுடன். நன்றி........... மு.இரா  

அன்பு.........

Image
அன்பு தன்னலமின்றி தருவதற்கே அன்பு உணர்ந்து குதிப்பதற்கே அன்பு அனைவருடன் பகிர்வதற்கே அன்பு என்றும் தூய்மையானதே அன்பு மகிழ்ச்சியில் துள்ளும் அன்பு வெட்கத்தில் மலரும் அன்பு அனுபவிக்க துடிக்கும் அன்பு அழிவல்ல நினைக்கும் அன்பு தருவது வலியை அன்பு திணிப்பது களிப்பை அன்பு வெல்வது நெஞ்சை அன்புக்கு தேவையில்லை மூளை   அன்பு அழகில் முதலில் மயங்கும் அன்பு செய்த மனம் தவிக்கும் அன்பு இல்லை என்றும் பாவம் அன்பு வெல்வது அல்ல விரும்பும் அன்பு உண்மையை கணிக்க தவறும் அன்பு கோபத்தையும் தூண்டும் அன்பு வயதை அல்ல காணும் அன்பே ஞானியை உருவாக்கும் அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை அன்பு இனி செல்வது சரியான பாதை அன்பு உயர பறக்க நினைக்கும் அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும் அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும் அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும் அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை

குடும்பம் ஒரு மரம்

ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும். * நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும். * இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள். * குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும். -கிருபானந்த வாரியார்

ஜீவ காந்த சக்தி

Image
இந்த உடலிலே திடப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால், அந்த உயிரானது மிக மிக நுண்ணிய பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக் கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால் வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச் சத்துப் பொருளாக (Essence) வரக்கூடிய Ectoplasm அல்லது ஓஜஸ என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு வியத்தகு ஆற்றல் பெற்றது தான் இங்கே உள்ள உயிர். அதில் ஒரு பூச்சு வேலை நடந்த பிறகு (Treatment) பதிவு செய்வது, பிரதிபலிப்பது என்பதால் அதிகமான இயக்க வேகம் பெறுகிறது. நாம் பேசுவது ஒரு Tapeல் பதிந்து கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துப் பார்த்தால் வெறும் பிளாஸ்டிக் தான். ஒட்டுவதற்காக Cellotape வைத்திருக்கிறோமே அதை Tape Recorderல் போட்டு ஓட்டினால் பேச்சைப் பதிவு செய்து விட மு...

உணவும், மருந்தும்......

"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்". எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும். உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியன்று. மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு. அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம்...

காந்தியடிகள் பொன்மொழிகள்

பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும். கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது. தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே. மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது. கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது. சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். சுதந்திர...

NHM Writer

Image
NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது ? NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும். தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்ல...