அதிசய மனிதர்
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர் மார்க்பாயல் (31). கடந்த 2 வருடமாக இவர் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறார். இவர் இங்கிலாந்தின் பிரீசைக்கிள் அமைப்பு வழங்கிய "கேரவன்" வேனில் தங்கியுள்ளார். அந்த வேனை அங்குள்ள ஒரு பண்ணை அருகே நிறுத்தியுள்ளார். தேவையான உணவு பொருட்களை தானே பயிரிட்டு வளர்க்கிறார். விறகு அடுப்பு மூலம் சமையல் செய்கிறார். தனக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மூலம் தயாரித்து கொள்கிறார். துணியை குளிர்ந்த நீரில் ஊற வைத்து கையால் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறார். "இன்கம்மிங்" வசதியுடைய செல்போனையும், சூரிய ஒளியில் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டரையும் பயன்படுத்துகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக வேகன் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரது மனதில் உதித்ததுதான் பணம் தேவையில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் உதித்தது. இது குறித்து கூறியதாவது:-
நண்பர்களுடன் உலகில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவேன். அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளினால் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், உலகநாடுகளிடையே சண்டைகள் குறித்து ஆலோசனை நடத்துவோம். இவை அனைத்தும் மனித இனத்துக்கு துன்பம் இழைப்பவை. பணம் சம்பாதிக்கதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, பணமில்லாமல் வாழ கற்றுக்கொடுக்கவே இந்த வாழ்வை மேற்கொண்டேன். அன்றாடம் தேவைப்படும் பொருட்களை தானே தயாரித்து கொண்டு வாழ்கிறேன் என்றார்.
'மாலைமலர்'
பேரறிஞர் அண்ணா
எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண்பட்ட அரசியல்வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். இவர், ஏழை எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சிமிகு எழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதை. அடக்கத்தின் வடிவம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நாட்டு மக்களுக்கு நல்கியவர்; முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர். திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்துகிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுதுகோலையும், இறுதி மூச்சு வரை பயன்படுத்தினார். | |
Subscribe to:
Comments (Atom)
