Posts

Showing posts from April 3, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா வெற்றி

Image
கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றுள்ளதை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இலங்கை அணியை நசுக்கி அபார வெற்றி பெற்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது உலகக் கோப்பையை இந்தியா வென்ற விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று இரவு முழுவதும் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இதேபோல அமெரிக்காவிலும் இந்தியர்கள், டோணி தலைமையிலான அணியின் வெற்றியை சிறப்பாக கொண்டாடினர். அதேபோல துபாயில் பட்டாசுகளை வெடித்து இந்தியர்கள் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினர். ஐக்கிய அரபு எமிரேட் முழுவதுமே இந்தியர்களின் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. சிறிய ஐஸ்கிரீம் பார்லர்களிலிருந்து பெரிய மால்கள் வரை எங்கு பார்த்தாலும், இந்தியர்களின் தலைகளாகவே இருந்தது. டோணி அடித்த சூப்பர் சிக்ஸைப் பார்த்து அத்தனை இந்தியர்களும் இந்தியா என்று குரலிட்டபோது அந்தப் பகுதியே நடுங்கியது போல இருந்தது. துபாயில், இந்தியா வெற்றியைத் தொட்ட அந்த இரவி...