மகிழ்ச்சியான நாடு இந்தியா !
வே கமாக வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் அமெரிக்கா , இங்கிலாந்தைக் காட்டிலும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது இந்தியா . இங்கிலாந்தைச் சேர்ந்த ' நியூ எகனாமிக்ஸ் ஃபவுண்டேஷன் ' என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப் படுத்தி , ' ஹேப்பி பிளானட் இன்டெஸ் ' பட்டியலிட்டுள்ளது . மொத்தம் 143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 35 வது இடத்தைப் பெற்றுள்ளது . பொருளாதாரத்தில் நட்புணர்வுடனும் , மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது . மேலும் , வாழ்க்கைத் தரம் , வாழ்க்கையில் பொருளாதாரம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கையில் திருப்தி போன்றவற்றையும் கொண்டு தரப் பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது . இந்தப் பட்டியலில் கோஸ்டா ரிகா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இந்தியா 35- வது இடத்தைப் பிடிக்க , அமெரிக்கா 114- வது இடத்திலும் , இங்கிலாந்து 74 வது இடத்திலும் உள்ளது . பிரேசில் , சீனா முறையே 9 மற்றும் 20 வது இடத்தை வகிக்கி...