Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

போட்டோஷாப்பில் வெப்‍‍கேலரி உருவாக்குவது எப்படி?

altஇன்றைய மல்டிமீடியா உலகில் புகைப்பட எடிட்டிங்கில் அனைவராலும் உபயோகிக்கபடுவது அடோபியின் போட்டோஷாப் ஆகும். இந்த மென்பொருளிலேயே பிளாஷ் கேலரியை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை ஒரு புதிய போல்டரை உருவாக்கி அதில் சேமித்துக்கொள்ளவும் உதாரணமாக « My documents « பின்னர் அதே “My documents » ல் புதிய போல்டர் ஒன்றை உருவாக்கி அதற்கு உங்களுக்கு தகுந்த பெயரை கொடுக்கவும் சான்றாக Webgallery.

முதலில் நாம் பின்னனி இசையை உருவாக்கவேண்டும் திரைப்பட பாடல்களையோ அல்லது Instrumental இசையையோ பயன்படுத்தலாம். இதில் ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும் அதாவது உங்களிடம் இருக்கும் இசையில் ஒரு கிளிப்பை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும் எனவே ஒரே பாடலையே திரும்ப திரும்ப உபயோகிக்க விரும்பினால் ஒரு பாடலை மட்டுமே பயன்படுதிக்கொள்ளலாம் , நிறைய புகைபடங்களை பயன்படுத்தி உருவாக்கும் கேலரிக்கு கண்டிப்பாக நீண்டநேர ஆடியோ கிளிப்பை இணைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைபீர்களேயானால் MP3 Joinerஅல்லது Audacity மூலமாக நீண்டநேர ஆடியோ கிளிப்பை உருவாக்கிக்கொள்ளவும் .

சுருங்கக்கூறின் உங்களுடைய ஆடியோ கிளிப் « useraudio”என்ற பெயரில் MP3ஆக‌ இருக்கவேண்டும். இனி இந்த ஆடியோ கிளிப்பை C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3\Presets\Web Photo Gallery\Flash – Gallery 2என்ற இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

alt
இப்போது போட்டோஷாப் ஐ இயக்கவும் File,Automate,Web Photo Galleryஎன்பதனை தேர்வு செய்யவும்.
alt
Styles என்பதில் « Flash-Gallery 2 » என்பதனை தேர்ந்தெடுக்கவும் Source Images என்பதில் நீங்கள் சேமித்துள்ள புகைப்படங்களின் போல்டரை தேர்வு செய்யவும் பிறகு destination இல் நீங்கள் உருவாக்கிய புதிய போல்டரை தேர்வு செய்யவும். பின்னர் Optionsஇல் Large Imagesஎன்பதனை தேர்வு செய்யவும் கடைசியில் Optionsஎன்பதில் Bannerஎன்பதை தேர்வு செய்து உங்களின் வெப் கேலரிக்கு பெயர் கொடுத்துக்கொள்ளவும்..Options என்பதில் Custom Colors என்பதனை பயன்படுத்தி உங்களின் கேலரியின் பின்னனி நிறம் பாண்டுகளின் நிறத்தையும் கூட கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்.
கடைசியாக Okஐ அழுத்தவும் .
alt
இனி போட்டோஷாப், கேலரியை உருவாக்கிவிடும். கேலரி தயாரானதும் நீங்கள் தேர்வு செய்திருந்த destinationபோல்டரில் உள்ளே index.htm என்ற பைலை இணைய உலாவியில் திறந்து பார்த்து மகிழலாம் மேலும் உங்களின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் .                                                                     வாழ்கவளமுடன்.    நன்றி...   Tamilcomputer.eu

முதுமையை வெல்ல நெல்லிக்கனி



இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.
மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
                                                                          வாழ்கவளமுடன்.    நன்றி...

சோர்வை நீக்குவதற்கு புதிய தெரபி முறை



தீவிரமான சோர்வு, கவனக்குறைபாடு, தசை மற்றும் மூட்டு இணைப்பு வலிகளை சரி செய்வதற்கு மூளை மற்றும் உடல் ரீதியாக தெரபி உதவுகிறது என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து லான்சட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2.15 லட்சம் மக்கள் சோர்வுப் பிரச்சனை மற்றும் மறதி குறைபாடுகளில் அவதிப்படுகிறார்கள்.

இவர்கள் இத்தகைய பாதிப்பு அடைவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சோர்வடையும் குறிப்பிட்ட நபரின் எண்ணம் மற்றும் செயலில் மாற்றம் ஏற்படுத்தும் சி.பி.டி தெரபியை மேற்கொள்ளும் போது தீவிர சோர்வு நீங்குகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய சிகிச்சை மிகச்சிறந்த பலனை தந்துள்ளதாக லான்சட் இதழின் ஆய்வு அறிக்கை எழுதியுள்ள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட தெரபி சிகிச்சை மூலம் சோர்வு மட்டுமல்லாமல் அவர்களது உடல் ரீதியான செயல்பாடும் வேகம் அடைகிறது என கூறப்படுகிறது.

தீவிர சோர்வு நிலைக்கான எம்.இ செயல் அமைப்பும் இந்த ஆய்வு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது என விமர்சித்து உள்ளது.

Crazy Talk

கணினிக்கு மனித இயல்புகள் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக நாம் Type செய்த சொற்களை வாசிக்கும் மென்பொருள்கள் பல, சாதாரணமாக புழக்கத்தில் காணப்படுகின்றன.

இம்முறை நாம் அறியவுள்ள Crazy Talk எனும் மென்பொருள் மிகவும் வித்தியாசமான பண்புகளைக் கொண்டுள்ளது. நாம் Type செய்யும்Text களை, மென்பொருளிலுள்ள சில உருவங்கள் வாயை அசைப்பதன் மூலம் கதைத்துக் காட்டும். அவ்வுருவங்களுக்கு ஏற்ப குரலும், உச்சரிப்புக்கு ஏற்ப உருவங்களின் வாயசைவும் பொருத்தமான வகையில் காட்சியாகும்.


நாம் Type செய்யும் வசனங்களை மட்டுமல்லாது, Microphone மூலம் நாம் கதைக்கும் சத்தங்களுக்கேற்பவும் தமது முக அசைவுகளைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. இம் மென்பொருளிலே, Model என குறிப்பிடப்படும் வகையில் சில உருவங்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து, நாம் Type செய்யும் சொற்களை அல்லது நாம் Record செய்த ஒலிகளை, அவற்றின் முகவாய் அசைவுகளின் மூலம் கேட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு Output ஆக பெறப்படும் Model களின் சொற்களிற்கேற்ப காட்டப்படும் அசைவூட்டத்தை .exe கோப்பாக மாற்றி, எமது நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளலாம். .exe கோப்பாக மாற்றி பகிர்வதனால், அக்கோப்பினை open செய்ய, Crazy Talk மென்பொருள் கணினியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் வழங்கும் ஒலியை அல்லது Type எழுத்துக்களை உச்சரிக்கும் உருவத்தோடு அமைந்த இடைமுகம்
எமது நிழற்படம் அல்லது நாம் விரும்பியவரின் நிழற்படத்தை குறித்த Model இற்கு பதிலாக பிரதியிட்டு வாய், மற்றும் கண் ஆகியவற்றின் அமைவை சரிசெய்தால், நாம் வழங்கிய நிழற்படம் நிஜமாகவே கதைப்பதை இம் மென்பொருளால் சாத்தியமாக்கலாம். நமது நிழற்படங்கள், முகவசைவுகளைக் காட்டி வார்த்தைகளை உச்சரிக்கும் முறை மிகவும் சுவாரசியமாக அமையும். 


ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பை மிக நுணுக்கமாகவும், மிகச் சரியாகவும், ஒலிவடிவிலும், முக அசைவிலும், காட்டுவதால், மொழியின் பாவனை தொடர்பில் பரிச்சயம் பெறுவதற்கும் இம்மென்பொருள் துணை புரியும் என்றே சொல்லாம்.
வெவ்வேறு நிழற்படங்களை முகவசைவுக்கேற்ப தொகுக்கும் இடைமுகம்  
இம் மென்பொருளை http://www.reallusion.com/crazytalk/ எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ள முடியும். நீங்களும் உங்கள் நிழற்படங்களை அல்லது நீங்கள் விரும்பியவர்களின் நிழற்படங்களை வழங்கி, அவை கதைப்பது போன்ற நிகழ்வை அனுபவிக்கலாமே! 

வாழ்க வளமுடன்.
நன்றி...
                reallusion.com
அனைவரையும் சென்றடைய வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.