Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

Corel DRAW Graphics Suite X5 15.0.0.489 Final FULL VERSION

Corel DRAW Graphics Suite X5 15.0.0.489 Final FULL VERSION
Read more...

வாழ்க வளமுடன்.
நன்றி........vis-soft.com  

கூந்தல் பராமரிப்பு

ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால்  பொடுகு  வராமல் தடுக்கலாம்  .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை  எல்லாவற்றையும்  வெயில் காயவைத்து  மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு   பதிலாக  வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்

ஹேர் டிரையர்   (hair dryer)அடிக்கடி  உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2  கப் வினிகரை கலந்து  தலையை அலசவும் அப்படியே  துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண்  சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து  தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால்   பளபளக்கும் உங்கள்  கூந்தல் .

முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு  தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு  இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில்  காயவைத்து தலையில் தடவி  சீயக்காய்  தேய்த்து  குளித்து வந்தால் உடல் சூடு  தணியும் . முடி உதிர்வதையும்  தடுக்கலாம் .

கறிவேபிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும்  அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .

Free Vector Graphic Background

064-Free Vector Graphic Background-free-vector-image



Download 064_Backgrounds-Banners

அறிவென்னும் ஆயுதம்

சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்து விடும்.

         மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன?  எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.

         எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Stock Vector – Paper Backgrounds


(more…)

Wallpaper


(more…)

Wallpapers widescreen HD



 Wallpapers widescreen HD - Abstraction # 5

Read more...

COLORFUL BACKGROUNDS

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக்குத் தள்ளி முன்னேறினார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார்.


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.
1,950-கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.இவருக்கு அடுத்தபடியாக எட்டாவது இடத்தில் 1,930-கோடி டாலர் சொத்து மதிப்புடன் லட்சுமி மிட்டல் உள்ளார்.
2008-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் லட்சுமி மிட்டல் 2,500-கோடி டாலர் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் இருந்தார்.
தொடர்ந்து 4,000-கோடி டாலர் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2,300-கோடி டாலராக இருந்தது.
அனில் அம்பானி 1000-கோடி டாலர் சொத்து மதிப்புடன் 34-வது இடத்தில் உள்ளார்.கடந்த ஆண்டு 3,200-கோடி டாலர் சொத்து மதிப்புடன் அனில் அம்பானி ஆறாமிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்த ரியல் எஸ்டேட் அதிபர் கே.பி.சிங்,தற்போது 98-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.இவரது சொத்து மதிப்பு 500-கோடி டாலராக சரிந்துள்ளது.கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 2,500-கோடி டாலராக இருந்தது.
இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 18,000-கோடி டாலரிலிருந்து தற்போது 10,900-கோடி டாலராக சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு கோடீஸ்வரர்கள் பட்டியலில் 53-இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர்.இது தற்போது 10-ஆகக் குறைந்துள்ளது.முதல் பத்து பேரில் 2-பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா,காற்றாலை அதிபர் துளசி தாந்தி,முகேஷ் அம்பானியின் நெருங்கிய தோழர் ஆனந்த் ஜெயின் ஆகியோர் பட்டியலில் இடம்பெறவில்லை.
இவர்கள் தவிர,ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயல்,யுனிடெக் அதிபர் எஸ்.ரமேஷ் சந்திரா,இந்தியாபுல்ஸ் அதிபர் சமீர் கெலோட்,எம்சிஎக்ஸ் அதிபர் ஜிக்னேஷ் ஷா,முதலீட்டு சந்தை வர்த்தகர் நிமேஷ் கம்பானி,கெளதம் தாப்பர்,கிராசியஸ் சல்தானா ஆகியோர் பட்டியலில் விடுபட்ட கோடீஸ்வரர்களாவர்.
பிர்லா குழும அதிபர் குமார் மங்களம் பிர்லா(124),கோஜ்ரெஜ் தலைவர் ஆதி கோத்ரெஜ்(183),சாங்வி குழும அதிபர் திலீப் சாங்வி (205),ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால்(234) மற்றும் மல்வீந்தர் சிங் (246),பலோன்ஜி மிஸ்திரி(261),ஜிஎம் ராவ்(318),மிக்கி ஜக்தானி(334)ஆகியோர் பட்டியலில் இடம்பெற்ற பிற இந்திய கோடீஸ்வரர்களாவர்.
கெளதம் அதானி,இந்து ஜெயின்,ஷிவ் நாடார்,சைரஸ் பூனாவாலா,அனில் அகர்வால்,உதய் கோடக்,கலாநிதி மாறன்,சந்துரு ரஹேஜா,சுபாஷ் சந்திரா,அனுராக் தீட்சித் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் 738-பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களில் மிக அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.முதலிரண்டு இடங்களில் பில்கேட்ஸ் மற்றும் வாரென் பஃபெட் ஆகியோர் உள்ளனர்.

"இன்பமும் துன்பமும்"

உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண்கருவிகளையும் உபயோகிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புக்கள் மனிதனிடம் அமைந்துள்ளன. மேலும் ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தையும் உணரும் ஐயுணர்வோடு, மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களை உணரத்தக்க ஆறாம் அறிவும் மனிதனிடம் அமைந்துள்ளது.

             இத்தகைய சிறப்புகளை உணரும்போது தான் ஒரு பேருண்மை தெளிவாகின்றது; இயற்கையே தன் பரிணாமத்தின் உச்சகட்டமாக மனித வடிவில் வந்து, தனது இயல்புகளை ரசித்தும், பெருமைகளை உணர்ந்தும் நிறைவு பெறுகிறது என்ற உண்மை விளங்குகிறது. இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற மனிதனின் பிறவி நோக்கம், தனது அறிவில் முழுமை பெற்று, இயற்கையின் சிறப்பு உணர்ந்து அமைதியும், நிறைவும் பெறுவதேயாகும். மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் மிகுமேயானால் பிறவியின் நோக்கமாகிய அறிவின் வளர்ச்சி தடைப்படும். அறிவானது அமைதியான வழியில் இயங்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

              இயற்கையாக எழும் தேவைகள் மூன்று. அவை :- பசி, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு. இந்த மூன்று உணர்வுகளையும் காலத்தோடும், அளவோடும், தக்க பொருட்களையும், வசதிகளையும் கொண்டு (with appropriate facilities and commodities) நிறைவு செய்து கொண்டேயிருக்க வேண்டும். மேலே விளக்கப் பெற்ற பசி உணர்வு, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு இவைகளைக் காலத்தோடு நிறைவு செய்யாவிட்டால், உடலில் அமைதி குலைந்து நலம் கெட்டுத் துன்ப உணர்வுகளாக மாறும்.

              இயற்கைத் துன்பங்களை அவ்வப்போது சமன் செய்து கொண்டே இருப்போமானால் மிகுதி இருப்பது என்ன?  அமைதியும், இனிமையும் தாமே! அமைதியே அறிவு ஆராய்ச்சிக்கும், உயர்வுக்கும் ஒத்ததாகும். எனவே, அமைதி காப்பது என்பதே மனிதனின் தலையாய செயல்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

  நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

           அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். இந்த மின் குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவ காந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக் கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெளியேறிய  பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Torrent மூலம் இலவச பதிவிறக்கம் செய்வது எப்படி?

 image
 Torrent என்றால் என்ன?
Torrent எண்பதின் மூலம் படங்கள், ஆடியோ & வீடியோ பாடல்கள், கேம்ஸ் என்று அனைத்துவிதமான கோப்புகளையும், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இதற்க்காக தனியாக Account எதுவும் தேவையில்லை. Rapidshare-ல் பதிவிறக்கம் செய்வது போல கடிணம் அல்ல… மிகவும் எளிய வழியில், மிக பெரிய கோப்புகளையும் (Movies and Games Files) எளிதாக பெற முடியும்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்வது முற்றிலுமாக Legal ஆகும். அதனால் நம்ம இஷ்டத்துக்கு, பிடித்த படங்கள், கேம்ஸ், மின் – புத்தகங்கள் என பதிவிறக்கம் செய்யலாம்.
Torrent மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?
பல Torrent வலைதளங்கள் உள்ளன. இத்தகைய தளங்களுக்கு சென்று, கோப்புக்களை தேர்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் µTorrent என்ற எளிய கருவியை கொண்டு, இந்த Torrent File-களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கருவியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (Install). இதனை பெற இங்கே சொடுக்கவும்….

தகவல்களைத் திருடும் Malware


மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், "இலவச தரவிறக்க வசதி" என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Software எனப்படும் மென்பொருட்கள்தாம் நம் கணினியை இயக்கி வருகின்றன. MS Office ல் இருக்கும் Word, Excel, Power point ஐ தெரியாதவர்கள் இருக்க முடியாது. கணினியே கதி என்று இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். Flash, silverlight, photoshop, Visual Basic, Oracle, என்று சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அடங்காது. உங்களை இணையத்தில் சஞ்சரிக்கச் செய்வதும் இந்த மென்பொருட்களே. இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் மென்பொருட்களை உருவாக்குவது மனித மூளையே. உயிர் காக்கும் பென்சிலின் ஆகட்டும், தலைமுறைகளை முடமாக்கின அணுகுண்டு ஆகட்டும் இரண்டுக்குமே மூல காரணம் இந்த மூளைதான்.
கணினிதுறையிலும் இந்த வாதம் பொருந்தும். நாம் தினம் உபயோகிக்கும் மென்பொருட்களை தயாரிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, நம்மை தொந்தரவு செய்யவே சிலர் மென்பொருள் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த மாதிரி (தீய) நோக்கத்துடன் வெளியிடப்படும் மென்பொருட்களைத் தான் Malware என்று சொல்கிறோம்
1. Malware என்றால் என்ன ?
தீங்கு செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்ட மென்பொருள் Malware என அழைக்கப்படும். உங்கள் அனுமதி இல்லாமல், உங்கள் கணினியிலிருந்து தகவல்களைச் சேகரிக்கவோ அழிக்கவோ பிறருக்கு அனுப்பவோ செய்வது இதன் வேலையாகும். தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகளில் பதுங்கி உங்கள் கணினியில் வந்திறங்கும்.
2. Spyware என்றால் என்ன ?
உங்கள் கணினியில் உளவாளியைப் போல் பதுங்கி இருக்கும். உங்களது நடவடிக்கையை கூர்ந்து கவனித்து உங்களுக்கு தெரியாமலேயே தன் எசமானுக்குத் தகவல்களை அனுப்பும். உதா: எம்மாதிரியான தளங்களை நீங்கள் அதிகம் பார்வையிடுகிறீர்கள், அத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் (password), Credit card Number, Bank account Number போன்ற தகவல்களைச் சேகரிக்கும். Spyware இன் ஆதிக்கம் இருக்கும் கணினியில் வேகம் குறைவது, வழக்கத்துக்கு அதிகமான, தொடர்பேயில்லாத Pop up வருவது, ஓர் இணையமுகவரியைத் தட்டினால் தானாகவே வேறு முகவரிக்குப் போவது போன்ற புதிரான நடவடிக்கைகளைக் காணலாம்.
3. Adware என்றால் என்ன ?
இது நம் வீட்டுத் திண்ணையிலே கிடக்கும் பிட்-நோட்டீஸ் மாதிரி. அதாவது தானாகவே விளம்பரங்கள் வந்து குவியும். அதிலும் முக்கியமாக, விளம்பரங்களில் தட்டினால் விற்கப்படும் பொருளுக்கு 50% - 70% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கும். இம்மாதிரி நடந்துகொள்ளும் மென்பொருட்கள் Adware என அழைக்கப்படும். பூட்டிக்கிடக்கும் வீட்டில் பிட்-நோட்டீஸ் குவிந்து கிடப்பது போல, முறையே கணினியைச் சுத்தம் செய்யாவிட்டால், இம்மாதிரி Adwares இன் தாக்கமும் அதிகரிக்கும்.
4. Phishing என்றால் என்ன ?
Fishing என்றால் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, Phising என்றால், தூண்டில் போட்டுத் தகவல்களை உங்களிடமிருந்தே பெறுவது. உண்மையான வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலிதளங்கள்தாம் இம்மாதிரி முறைகேடான செயல்களின் அரங்கம்.
உதா: - உண்மையான ICICI வங்கியின் முகப்பு முகவரி http://www.icicibank.com/. இதே ICICI வங்கியின் Login தளமுகவரி https://infinity.icicibank.co.in என்று துவங்கும். கவனிக்க வேண்டியது முகவரியை மட்டுமன்று, முகவரிக்கு முன்னால் வரும் HTTP - HTTPS என்பதைத்தான். காரணம், திடீரென்று உங்களுக்கு " ICICI Bank" இலிருந்து வந்தது போல் தொற்றுவிக்கும் ஒரு கடிதம் வரும்.
" எங்களது வங்கியில் / தளத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்கிறோம். அதன் காரணமாக உங்கள் பயணர் கணக்கைப் பாதுகாத்துக்கொள்ள கீழே இருக்கும் சுட்டியில் வங்கிக் கணக்கு எண் – கடவுச்சொல் – விலாசம் – credit card number போன்ற தகவல்களைத் தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்."
உண்மையான வங்கியிலிருந்து வந்தது போல் தோன்றும் இந்த அஞ்சலில் இருக்கும் சுட்டியைச் சொடுக்கினால், ICICI வங்கியின் தளத்தைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம் உங்களை வரவேற்க்கும். கூர்ந்து கவனித்தால், தள முகவரியில் HTTPS க்கு பதில் HTTP என்று இருக்கும்.
HTTPSHyper Text Transfer Protocol Secure
HTTP – Hyper Text Transfer Protocol

" Secure " என்பது இல்லாத தளங்களில் எக்காரணம் கொண்டும் உங்கள் Credit card தகவல்களை அல்லது Banking மற்றும் அந்தரங்கத் தகவல்களை அளிப்பதைத் தவிர்க்கவும். ஒரு முறை உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு எண் கைமாறிவிட்டால், என்ன நடக்கும் என்பதை விவரிக்க முடியாது.
இம்மாதிரி வரும் அஞ்சல்களை எக்காரணம் கொண்டும் நம்பி விடாதீர்கள். நேரடியாக தொடர்புடைய அலுவலகம் செல்ல முடியுமென்றால், சிரமம் பார்க்காமல் போய் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவும். இது முடியாத பட்சத்தில், சம்பந்தபட்ட HTTPS தளத்துக்குச் சென்று, உதவிப் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி எண் அல்லது Instant Messenger ID இருந்தால், நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இதுவும் இல்லையென்றால், Contact Customer support என்பதைச் சொடுக்கி மேற்படி விவரங்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
-
வாழ்க வளமுடன்.
நன்றி...........

3D BUMP TOP

3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.
1
2 
3
 4 விளக்கமாக இதை பார்க்கவும்:
தேவையானவை:
* Processor: 1.8 GHz
* Memory: 1.0 GB
* Video: 128 MB
* Free Disk Space: 15MB
* Screen resolution: 800 � 600
* OpenGL 2.0
* Internet connection
* Windows XP/Vista/7

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு

வாழ்க வளமுடன்.
நன்றி........... 

அன்பு.........


அன்பு தன்னலமின்றி தருவதற்கே
அன்பு உணர்ந்து குதிப்பதற்கே
அன்பு அனைவருடன் பகிர்வதற்கே
அன்பு என்றும் தூய்மையானதே

அன்பு மகிழ்ச்சியில் துள்ளும்
அன்பு வெட்கத்தில் மலரும்
அன்பு அனுபவிக்க துடிக்கும்
அன்பு அழிவல்ல நினைக்கும்

அன்பு தருவது வலியை
அன்பு திணிப்பது களிப்பை
அன்பு வெல்வது நெஞ்சை
அன்புக்கு தேவையில்லை மூளை
 
அன்பு அழகில் முதலில் மயங்கும்
அன்பு செய்த மனம் தவிக்கும்
அன்பு இல்லை என்றும் பாவம்
அன்பு வெல்வது அல்ல விரும்பும்

அன்பு உண்மையை கணிக்க தவறும்
அன்பு கோபத்தையும் தூண்டும்
அன்பு வயதை அல்ல காணும்
அன்பே ஞானியை உருவாக்கும்

அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை

அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்

அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை

குடும்பம் ஒரு மரம்

ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.

-கிருபானந்த வாரியார்

ஜீவ காந்த சக்தி

இந்த உடலிலே திடப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால், அந்த உயிரானது மிக மிக நுண்ணிய பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக் கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால் வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச் சத்துப் பொருளாக (Essence) வரக்கூடிய Ectoplasm அல்லது ஓஜஸ என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு வியத்தகு ஆற்றல் பெற்றது தான் இங்கே உள்ள உயிர். அதில் ஒரு பூச்சு வேலை நடந்த பிறகு (Treatment) பதிவு செய்வது, பிரதிபலிப்பது என்பதால் அதிகமான இயக்க வேகம் பெறுகிறது. நாம் பேசுவது ஒரு Tapeல் பதிந்து கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துப் பார்த்தால் வெறும் பிளாஸ்டிக் தான். ஒட்டுவதற்காக Cellotape வைத்திருக்கிறோமே அதை Tape Recorderல் போட்டு ஓட்டினால் பேச்சைப் பதிவு செய்து விட முடியுமா?  முடியாது. ஏனென்றால் Tapeக்கு முதலில் ஒரு காந்தப் பூச்சு (Magnetic treatment) கொடுக்க வேண்டும். பிறகு தான் அது பதிவை ஏற்கும். ஏற்ற பின் பிரதிபலிக்கும்.

          அது போலப் பதிதல், பிரதிபலித்தல் (Functions) என்று மன இயக்கத்திற்கு உரிய செயலாக எண்ணும்போது அந்த உயிர்ச் சக்தி சுழலும் போது தானாகவே அந்த அலை வெளிவந்து கொண்டே இருக்கும். அப்படி உடல் முழுவதிலும் இருக்கக் கூடிய உயிர்சக்தி சுழன்று வெளியிடக்கூடிய அலையினுடைய அழுத்தம் உடலிலே ஜீவகாந்த சக்தி என்று சொல்லுகிறோம். அந்த அலை அழுத்தம் தான் ஜீவகாந்த சக்தி. உயிருக்கும் ஜீவகாந்த சக்திக்கும் வித்தியாசம் உண்டு. உயிர் என்பது ஒரு இயக்க நிலையம், இயங்கிக் கொண்டே இருப்பது. அதிலே இருந்து வெளிவந்து விரிந்து கொண்டே இருப்பது விரிவு அலை - அதுதான் ஜீவகாந்த சக்தி.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உணவும், மருந்தும்......


"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்".

எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும்.

உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியன்று.

மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு.

அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி வேறொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

காந்தியடிகள் பொன்மொழிகள்

  • பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
  • கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
  • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
  • தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
  • பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
  • மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
  • உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
  • சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
  • செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
  • மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
  • சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
  • எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.
  • நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
  • தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
  • பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
  • கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
  • ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
  • உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
  • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
  • மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
  • கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.
  • பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது. 
  •  வாழ்க வளமுடன்.

NHM Writer

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது ?

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.
NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
Click here to download NHM Writer
image
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image
2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image
3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image
4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image
5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image
6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
image
பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
image
NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?
NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?
நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.
image
தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?
NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
image
அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
image
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?
முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
image
அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 
image
நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.
யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?
எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 
Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
image
அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்
image
உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
image
நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

வாழ்க வளமுடன்.
நன்றி.......ZUHAINA FAIZAL

உலகமே ஒரு கலா சாலை

உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்
             ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில்
             பல புதிய பாடம் சூழ் நிலைகட் கேற்ப
             பலாத் காரமாகப் போதிக்கும், என்றும்
             நலம் விரும்பும் அறிஞர் பலர் செய்யும் போதம்
             நல் வாழ்வில் அவர்கள் சந்தித் தாராய்ந்த
             சில முக்கிய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்
             சிந்தனையைச் செயல் திறனை ஒழுங்கு செய்யும்.

          இந்த உலகம் ஒரு பழமையானதும், பெரியதுமான கலாசாலையாகும். சூழ்நிலைகளுக்கேற்றபடி உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் புதிய புதிய பாடங்கள் பலாத்காரமாகப் போதிக்கப்படுகின்றன. இந்தப் படிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. சமூக நலமே குறிக் கோளாகக் கொண்டு வாழும் அறிஞர்கள் அவ்வப்போது பல விதத்தில் மக்களுக்கு நற்பயன் விளைவிக்கும் சன்மார்க்கங்களையும், வாழ்க்கை அனுபவ நுட்பங்களையும் போதனை செய்து வருகிறார்கள்.

         அவர்கள் வாழ்வில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, இன்ப துன்ப விளைவறிந்து வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறார்கள். இந்தப் போதனைகள் அனைத்தும் மக்களின் சிந்தனையை உயர்த்திச் செயல் திறமையை ஊட்டி வாழ்வை ஒழுங்குபடுத்தி வளப்படுத்துவனவாம்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மன உறுதி

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்?  ஏன் அமைதியான, சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம்?  ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

        உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன், நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டுப் போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும், பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கிப் பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.

        பின்னர் கடைத்தெருவுக்குப் போய்க் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால், அவற்றை வைக்கப் பையில் இடமில்லை. பையில்தான் ஏற்கனவே நிரப்பி விட்டீர்களே!  இப்போது உங்கள் பிரச்சினை என்ன?  ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு, எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா?  அல்லது, காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா?  கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

        ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து, உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம் (Yoga).
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு.........

இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு.

        அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது?  சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன?  காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது.

        அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான்.

        எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால், ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, அறத்தை உணர்த்தவல்லது தவமும், அகத்தாய்வும்; அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்று விட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?


நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.

இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள் கிடைக்கும். அதிலிருந்து Show Original என்பதை தேர்வு செய்யவும்.
உடனே வலையுலாவியில் இன்னொரு விண்டோ திறக்கப்படும். அதில் நமக்கு வந்த மின்னஞ்சலின் என்கோடிங் (Encoding)செய்யப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும்.

கீழ் உள்ள படத்தில் உள்ள வட்டமிட்டுள்ள பகுதியில் Received from என்ற வரியில்
நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை அனுப்பியவரின் ஐபி முகவரி எண் இருக்கும். அதை வைத்து ஒருவரின் ஐபி எண்ணை அறியலாம்.

அந்த ஐபி எண்ணை வைத்து தகவல்கள் பெற உதவும் வலைதளங்களின்(Tracing websites) மூலம் அது எங்கிருந்து வந்தது, நாடு, செர்வர் பெயர் போன்ற தகவல்களையும் பெற முடியும். www.cqcounter.com/whois தளத்தில் உங்களுக்கு வேண்டிய ஐபி எண்ணை கொடுத்து மேலதிக விவரங்களை பெறலாம்.

வாழ்க வளமுடன்.
நன்றி...........