Posts

Showing posts from August, 2010

மகிழ்ச்சியான நாடு இந்தியா !

Image
வே கமாக வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் அமெரிக்கா , இங்கிலாந்தைக் காட்டிலும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது இந்தியா . இங்கிலாந்தைச் சேர்ந்த ' நியூ எகனாமிக்ஸ் ஃபவுண்டேஷன் ' என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப் படுத்தி , ' ஹேப்பி பிளானட் இன்டெஸ் ' பட்டியலிட்டுள்ளது . மொத்தம் 143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 35 வது இடத்தைப் பெற்றுள்ளது . பொருளாதாரத்தில் நட்புணர்வுடனும் , மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது . மேலும் , வாழ்க்கைத் தரம் , வாழ்க்கையில் பொருளாதாரம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கையில் திருப்தி போன்றவற்றையும் கொண்டு தரப் பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது . இந்தப் பட்டியலில் கோஸ்டா ரிகா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இந்தியா 35- வது இடத்தைப் பிடிக்க , அமெரிக்கா 114- வது இடத்திலும் , இங்கிலாந்து 74 வது இடத்திலும் உள்ளது . பிரேசில் , சீனா முறையே 9 மற்றும் 20 வது இடத்தை வகிக்கி...

சுடச் சுட டீ குடிக்கறீங்களா?தொண்டைப் புற்றுநோய் வரும்,உஷார்!

Image
ஆவி பறக்கும் சூடான டீயை குடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமிருப்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான தேநீர் அருந்துவதால் உணவுக் குழாய் மற்றும் வாய்க்கும்,உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள பகுதியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது. ஈரானிலுள்ள டெக்ரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் ரேஸா மலேக்ஸாதே இது குறித்து தெரிவிக்கையில்,சூடான டீ பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம்,தொண்டைப் புற்றுநோயைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும்,புற்றுநோயால் பாதிக்கப்படாத 571-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும் ஆராய்ச்சி செய்து இந்த முடிவை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கோப்பையில் தேநீர் ஊற்றப்பட்ட 4-நிமிஷத்திற்குள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்குள் தேநீர் பருகுபவர்களைவிட,தேநீர் ஊற்றப்பட்ட 2-நிமிஷத்துக்குள்,அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் ...

சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன்

Image
செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது. sony-ericsson-c905-282x300செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது. 2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது

மூலப்பொருள் விலை உயர்வு: சிவகாசியில் அச்சுத்தொழில் தேக்கம் !

Image
சிவகாசி: காகித அட்டை விலை உயர்வால் சிவகாசியில் அச்சுத் தொழிலில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி, ஸ்வீட் பாக்ஸ், மருந்துப் பெட்டி, தேயிலைப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு பெட்டிகளை தயாரிக்க காகித அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையில், தேவையானவற்றை ஆப்செட் அச்சகங்களில் அச்சிட்டு, இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர். சிவகாசியில் இத்தகைய பணிகளை மேற்கொள்வதற்காக காகித அட்டை தினசரி சுமார் 600 டன் தேவை. சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காகித அட்டை வாங்கப்படுகிறது. இந்த அட்டைகள் டன் ஒன்றுக்கு ரூ. 28 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரம் வரை தர வாரியாக உள்ளன. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை டன் ஒன்றுக்கு ரூ. 2,000 விலை கூடியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சிவகாசியில் உள்ள அச்சு நிறுவனங்கள் தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களிடம் தேவைக்கு ஏற்ப, சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் பெறுவார்கள். பள்ளிக்குத் தேவையான நோட்டுப் புத்தக அட்டைகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் பெறுவார்கள். ஆர்டர் பெறும்போது காகித அட்டை ...

BALAJI

Image

அச்சு இயந்திரம்

Image
அச்சு இயந்திரம்  என்பது காகிதத் தாள்களில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் ஒரு  இயந்திரம்  ஆகும்.   முதல் அச்சியந்திரம்  1450  ஆம் ஆண்டு  ஜெர்மனியைச்  சேர்ந்த  ஜோகன் கிட்டன்பெர்க்  என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவலாக  ஐரோப்பாக்  கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகம் அச்சுக்கூடம் எனப்படுகிறது.

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

Image
இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌. புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம். ‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து. இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம். இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வ...

செல்போன் வாங்க ஆலோச‌னை சொல்லும் இணையதளம்

Image
எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு முன் இண்டெர்நெட்டில் பல்வேறு போன்களை பார்த்து அவற்றின் விலை மற்றும் அமசங்களை அலசிப்பார்த்து கொள்ளலாம். இதைவிட‌ சுல‌ப‌மான‌ வ‌ழி ஒன்று இருக்கிற‌து.அது நேராக‌ போன்க‌ரி இனிஅய‌த‌ள‌த்திற்கு செல்வ‌து தான்.இந்த‌ த‌ள‌ம் உங்களுக்கு ஏற்ற‌ புதிய‌ போன் எது என்று தேர்வு செய்து கொள்ள‌ வ‌ழி காட்டுகிற‌து. இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்த‌தும் உங்க‌ள்: ப‌ட்ஜெட்டை குறிப்பிட்டு விட்டு,போனில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் அம்ச‌ங்க‌ள் எவை என்ப‌தை குறிப்பிட‌ வேண்டும்.எல்லாவ‌ற்றுக்கும் த‌னித்த‌னி க‌ட்ட‌ங்க‌ள் இருப்ப‌தால் அவ‌ற்றில் இருந்து த...

அமைதி

Image
தகிக்கின்ற பூமி கொதிக்கின்ற பாதை வெறிக்கின்ற கதிரவன் எரிக்கின்ற பார்வை முத்துமுத் தெனவே முளைத்து முகிழ்த்திடும் சொத்துக்கள் சேர்ந்தென்னை சோர்ந்திட வைத்திடும் ஆயாசம் மேலும் கூடும் ஆகாயம் போலே நீளும் நெஞ்சுக்குள் தீயை மூட்டி நினைவுக்குள் கங்காய்க் காய்க்கும் முட்களே பாதை போடும் வலிகளே வாழ்க்கை ஆகும் கண்ணீரே காயம் ஆற்றும் குருதியே தாகம் தீர்க்கும் உள்ளுக்குள் உறையும் நேசம் உயிரெல்லாம் வாசம் வீசும் வெந்தாலும் வேதனை இல்லை குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை --கவிநயா நன்றி:   http://kavinaya.blogspot.com

பூமகளே பசும்பொன்னழகே !

Image
திருமாலவனின் திருமார்பினிலே சுடராய் ஒளியாய் இருப்பவளே! திரைமாக் கடலை ததியாய் கடைய மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே! பகலினில் எத்தனை சூரியரோ என பகலவன் மயங்கிடும் பேரெழிலே! இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என சந்திரன் மயங்கிடும் சுந்தரியே! வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில் மாதவன் மலர்முகம் சுற்றிடுமே! செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த மாயவன் திருவடி பற்றிடுமே! பூமகளே பசும்பொன் னழகே இந்த நானிலம் காத்திடும் நாயகியே! வான்மகளே எங்கள் தேவதையே இந்த மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே! தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந் தாமரைப் பதங்கள் சரணம் அம்மா! தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந் தாமரை வடிவே வரணும் அம்மா!! --கவிநயா SriLakshmi_song_su... நன்றி........ http://kavinaya.blogspot.com

Vector Stock Colourful Feather

Image
August 21st, 2010 uploadsecond Vector Stock Colourful Feather EPS | JPEG Preview | 15.03 MB RAR Read more »

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

Image
குகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் கிடைக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை கூகிள் புக்ஸ் இணையதளத்திற்கு சென்று புத்தகத்தின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. புத்தகங்கள் பலவற்றை பல உலாவிகளில் நாம் படிக்க முடிவதில்லை, கூடவே அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கூகுள் புத்தகங்களைத் தேடவும் படிக்கவும் புதிதாக ஒரு டெஸ்க்டாப் மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. சில மில்லியன் இலவச புத்தகங்களை தன்னகத்தே வைத்தும் பல மில்லியன் புத்தகங்களின் முக்கியமான பக்கங்களை வைத்தும் உள்ள கூகுள் புக்ஸ் தளங்களில் சென்று நாம் புத்தகத்தை உலாவி வழியாக தேடுவதற்கு பதிலாக ஒரு மென்பொருள் வந்துள்ளது. மென்பொருளின் பெயர் கூரீடர்(GooReader) இந்தச் சுட்டியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும். Download இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும் அடுத்து இந்த மென்பொருளை இயக்கி நமக்கு தேவையா புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடவேண்டியது தான் உடனடியாக நமக்கு புத்தகங்களை காட்டுகிறது இதிலிருந்து நாம் பார்க்க விரும்பும் புத்தகத்தை சொடுக்கினால் தனி புத...

எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.

Image
தினமும் புதிது  புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம் திறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு. டெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு செல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம் நேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில் இருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர் தட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர் இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.typinglessons-online.com/EN/ இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை பயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர் எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை சரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின் படமும் திரையில் தெரிகிறது. தினமும் சில ...

அமைவு

Image
இது தலைமுறை இடைவெளியின் ஏங்கலும்… ஏந்தலும்… பாதுகாப்பை உணரும் தருணம்… இதுபோல் அமையுமா ஈழத்தில் ?

இடர்

Image
தெரிகிறதா…… இடர்களுக்கு மத்தியில் எங்களின் ஏக்கம்? இன்னுமா வரவில்லை எங்களிடம் தாக்கம்??       (ஈழத்தில் ஒரு காட்சி) 

குழந்தை

Image

தாய்ப்பால் வாரம்

Image
' தாய்ப்பால் வாரம் அல்ல அல்ல தாய்ப்பால் வரம் ' உலக தாய்ப்பால் வாரம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்பட்டது. தாய்ப்பால் அளிப்பது வரம். அதற்குக் கொடுப்பினை வேண்டும். எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்தப் பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப் படுத்துகின்றனர். ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே அப்பெண்ணின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. கருவான குழந்தையைத் தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு உதவியாகக் கருவரை என்னும் கருப்பையில் அக் குழந்தையைக்கு தேவையான காற்று, நீர், மற்றும் அதற்குத் தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாகச் செலுத்தப்படும். அருமையான ஏற்பாடுகள், அனைத்தும் இயற்கையாக ஏற்படுத்தப் பட்டு, அக்குழந்தை சரியான வளர்ச்சி அடைந்தவுடன் வெளியேற்ற அப் பெண்களின் இடுப்புப் பகுதியில் இருக்கும் பெல்விஸ் தானாக விரிவடைந்து மீண்டும் சுருங்கும் வகையில் அமைகிறது. அப்படிப் பிறந்த குழந்தைக்கு இந்த உலக...

எங்கள் தாய்!!

Image
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்! யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள் ஆயினுமே எங்கள் தாய் – இந்தப் பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய் முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் நாவினில் வேதமுடையாள் கையில் நலந்திகழ் வாளுடையாள் – தனை மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடையாள் அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் – தனைச் செறுவது நாடி வருபவரைத் துகள் செய்து கிடத்துவள் தாய் பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும் புண்ணிய நெஞ்சினள் தாய் – எனில் தோமிழைப்பார் முன் நின்றிடும் கார் கொடும் துர்க்கை அனையவள் தாய் கற்றை சடைமதி வைத்த துறவியைக் கைதொழுவாள் எங்கள் தாய் – கையில் ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும் ஒருவனையும் தொழுவாள் யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்றென நன்றறிவாள் – உயர் போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடையாள் நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம...

Ed Mubarak

Image

independence day

Image

Gandhiji Photos

Image