Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

மன உறுதி

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்?  ஏன் அமைதியான, சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம்?  ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

        உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன், நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டுப் போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும், பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கிப் பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.

        பின்னர் கடைத்தெருவுக்குப் போய்க் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால், அவற்றை வைக்கப் பையில் இடமில்லை. பையில்தான் ஏற்கனவே நிரப்பி விட்டீர்களே!  இப்போது உங்கள் பிரச்சினை என்ன?  ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு, எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா?  அல்லது, காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா?  கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

        ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து, உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம் (Yoga).
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு.........

இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு.

        அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது?  சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன?  காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது.

        அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான்.

        எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால், ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, அறத்தை உணர்த்தவல்லது தவமும், அகத்தாய்வும்; அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்று விட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?


நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.

இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள் கிடைக்கும். அதிலிருந்து Show Original என்பதை தேர்வு செய்யவும்.
உடனே வலையுலாவியில் இன்னொரு விண்டோ திறக்கப்படும். அதில் நமக்கு வந்த மின்னஞ்சலின் என்கோடிங் (Encoding)செய்யப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும்.

கீழ் உள்ள படத்தில் உள்ள வட்டமிட்டுள்ள பகுதியில் Received from என்ற வரியில்
நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை அனுப்பியவரின் ஐபி முகவரி எண் இருக்கும். அதை வைத்து ஒருவரின் ஐபி எண்ணை அறியலாம்.

அந்த ஐபி எண்ணை வைத்து தகவல்கள் பெற உதவும் வலைதளங்களின்(Tracing websites) மூலம் அது எங்கிருந்து வந்தது, நாடு, செர்வர் பெயர் போன்ற தகவல்களையும் பெற முடியும். www.cqcounter.com/whois தளத்தில் உங்களுக்கு வேண்டிய ஐபி எண்ணை கொடுத்து மேலதிக விவரங்களை பெறலாம்.

வாழ்க வளமுடன்.
நன்றி...........

கரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

இப்பொழுது கணினி பயன்படுத்துபவர்கள் பலரும் தகவல்களை சேமிக்க பயன்படுத்துவது CD,DVD,PEN DRIVE போன்றவை ஆகும். இதில் உள்ள தகவல்கள் சேதம் அடையும் போது , அதில் உள்ள தகவல்களை இழக்க நேரிடும். அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க CD/DVD/BlueRay Recovery என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க: CD/DVD/BlueRay Recovery 

இந் மென்பொருளை தரவிறக்கி  இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  Start ->Allprograms ->CD/DVD/BlueRay Recovery  என்பதை ஒப்பன் செய்ய வேண்டும்.

ஒப்பன் செய்த பின் Add Folder என்பதை கிளிக் செய்து CD/DVD யில் உள்ள பைல்களை தேர்ந்தெடுக்கவும். பின் Browse என்னும் பொத்தானை கிளிக் செய்து Output எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். Coping Speed என்பதில் Normal லாக இருப்பதே நன்று. Start பட்டனை கிளிக் செய்தவுடன் CD/DVD ல் உள்ள பைல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.
இந்த CD/DVD/BlueRay Recovery யானது corrupted digital multimedia files, audio, video, image files, MPEG, AVI, RM, MP3, JPEG etc, and for damaged document and text files. ஆகிய அனைத்து வகையான பைல்களையும் ஆதரிக்கும்.

வாழ்க வளமுடன்.
நன்றி...........