உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்!
வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.
ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.
தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.
படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,
பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.
மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.
வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.
ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும். கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் அய்யமில்லை.
மைதமிழ் வானொலி
இன்றை நவீன உலகமயமாக்கலில் இணையத்தின் செயற்பாடு அதீத வளர்ச்சியடைந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமே.
இணைய வானொலி
ஒர் ரோடியோவில் பல அலை வரிசைகளை கேட்பது போன்று இணைய வானொலியிலும் எமக்கு பிடித்தமான ஒலிபரப்புக்களை கேட்டு மகிழும் வசதி உள்ளது.
மைதமிழ் வானொலியின் மென்பொருளின் சிறப்பு
பல வகையான இணைய வானொலிகள் இருந்தாலும் இவ் வானொலியில் ஓர் தனித்துவ சிறப்பு உண்டு. அதாவது இணைய உலாவி சென்று இணையத்தள முகவரியை தட்டச்சு செய்து தேவையான வானொலியை தெரிவு செய்யும் சிரமம் இங்கு இல்லை. எமது டெஸ்டொப்பில் உள்ள மைதமிழ் என்ற icon னை அழுத்துவதன் மூலம் இதனை செயற்படுத்த முடியும். அதுமட்டுமன்றி இணைய வாசகர்களுக்கு மிகவும் பரீட்சயமான இணைதள முகவரிகளும் அதில் வரும் முக்கிய செய்திகளும் இதில் காட்சிபடுத்தப்படுகின்றது. எமக்கு தேவையான செய்தியை சொடுக்குவதன் மூலம் நேர விரயத்தை இங்கு தவிர்த்துக் கொள்ளலாம்.
இதனை உங்கள் கணனியில் செயற்படுத்தும் முறை
முதலில் .net framework4.0 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் மைதமிழ் என்று மென்பொருளினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்
செயற்படுத்தல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இச் சுட்டியில் சென்று பாருங்கள்
http://www.mytamilsoft.com/mytamil/
Google+

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம்மொன்றை உருவாக்கி மட்டுபடுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு பரிசோதனைக்காக உபயோகத்திற்கு விட்டது கூகுள்.
கூகுள் பிளஸ் பற்றிய சில தகவல்கள் இங்கே
சமூகவலை பேஸ்புக் தளத்திற்கு சிறந்த மாற்றீடாக இது அமையுமாம்.
இலகுவாக அனைத்து நண்பர்களுடனும் இணைப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
கூகுள் + பேஸ்புக் போன்று நியூஸ் பீட்ஸ் புரோபைல் படங்கள் போன்றவற்றை தந்தாலும், எல்லா நண்பர்களும் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை. பேஸ்புக் பிரபலமாக ஆக பிரைவசி தொடர்பில் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கியது. ஆனால் பிரைவசி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கின்றதாம் கூகுள் +.......
கூகுள் பிளஸ் பற்றிய ஏனைய விபரங்களை வலைப்பதிவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்.
கூகிள் ப்ளஸ் என்றால் என்ன?
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.
என்னென்ன வசதிகள்?
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.
என்னென்ன வசதிகள்?
ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.
இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
கணிதத்தை கற்றுக் கொடுக்கும் இணையதளம்
| கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா, கவலை வேண்டாம் புதிய பரிமாணத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணணி ஆசிரியர்கள். சாதாரண பெருக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும், ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது. சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதைப்போல் தான் கணித்ததை வேடிக்கையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம். இங்கு சென்று சாதாரண பெருக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர். இயற்கணிதம்(Algebra), வடிவியல்(Geometry) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர். கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல் http://www.mathsisfun.com/ |
Subscribe to:
Comments (Atom)






