Posts

Showing posts from January 31, 2012

கண்களை திறங்கள்...

Image
விண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.   1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்.... படித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும். 2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வே...