Posts

Showing posts from September 6, 2010

உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்........

Image
கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம். இத்தகைய  சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும். அத‌ன் பிற‌கு பார்த்தால் சாதார‌ண‌ பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும். சின்ன‌ திருத்த‌திற்கு பிற‌கு ப‌ழைய‌ப‌டி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்துவிடும். ஆனால் ச‌ம‌ய‌ங்களில் கோளாறுக்கான‌ கார‌ண‌த்தை க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடிக‌ளே திண‌றிப்போய் விடுவார்க‌ள். இப்ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளை விர‌க்தியி...