Posts

Showing posts from May, 2011

மே18‍‍: தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை !

Image
இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினத்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது. தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர். உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே. தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை. மாவிலாற்றில் தொடங்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள்...

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களுக்காக வெளியிட்ட புதிய ஆடியோ செய்தி

" அன்னையர் தினம் "

Image
உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது, அமெரிக்கா நாட்டின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தை சேர்ந்த அன்னா எம்.ஜர்விஸ் என்ற பள்ளி ஆசிரியை, தனது தாயார் மறைவுக்கு பிறகு, அவரது தியாகத்தை நினைத்து அன்னையர் தினம் கொண்டாட விரும்பினார். அன்னையர் தினத்தின் அவசியத்தையும் ஆட்சியில் இருந்தவர்களுக்கு கடிதம் மூலம் எழுதினார். இந்த நிலையில், அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக அன்னா ஜார்விஸ், தனது தாயாருக்கு பிடித்த பூ, அலங்கார பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, தான் செல்லும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களிடம் அதை வழங்கி தங்கள் வீடுகளுக்கு சென்று தாயாரிடம் வழங்கி கவுரவிக்குமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து அன்னையர் தினம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய தொடங்கியது. 1914 ம் ஆண்டு மே மாதம் 8 ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், ஆண்டுதோறும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும் அறிவித்தார். அதன்படி, ஆண்டுதோறும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை ச...

பின்லேடன் படத்தில் கம்ப்யூட்டர் வைரஸ்

Image
பாஸ்டன் : பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான போலி படங்கள், வீடியோக்களை கிளிக் செய்தால் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கக்கூடும் என்று அமெரிக்க புலனாய்வு போலீசார் எச்சரித்துள்ளனர். பின்லேடனை சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ள அமெரிக்கா, அதற்கான ஆதாரமாக படங்கள், வீடியோக்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், பல்வேறு இணைய தளங்களில் பின்லேடன் மீதான தாக்குதல் பற்றிய போலி படங்கள் இடம்பெற்றுள்ளன. இமெயிலாக அவை அனுப்பப்படுகின்றன. பின்லேடன் கொலை வீடியோ என்ற பெயரிலும் பல இணைப்புகள் நடமாடுகின்றன. அவை உண்மையானவை அல்ல என்றும், அவற்றை திறந்து பார்ப்பதன் மூலம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கக்கூடும் என்றும் அமெரிக்க புலனாய்வு போலீசார் (எப்.பி.ஐ.) எச்சரித்துள்ளனர். இதுபற்றி பாஸ்டனில் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பின்லேடன் கொல்லப்பட்டதைப் பற்றி அறிய மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சித்தரிக்கப்பட்ட, மாற்றப்பட்ட படங்களை வெளியிடுகின்றனர். அவற்றின் மூலம் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. எனவே, பின்லேடன் கொலை தொடர்பான இமெயில், வீடியோ, படங்களை இணைய தளத்தில் கிளிக் செய்தால் ...