Posts

Showing posts from September, 2010

உலகமே ஒரு கலா சாலை

Image
உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்              ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில்              பல புதிய பாடம் சூழ் நிலைகட் கேற்ப              பலாத் காரமாகப் போதிக்கும், என்றும்              நலம் விரும்பும் அறிஞர் பலர் செய்யும் போதம்              நல் வாழ்வில் அவர்கள் சந்தித் தாராய்ந்த              சில முக்கிய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்              சிந்தனையைச் செயல் திறனை ஒழுங்கு செய்யும்.           இந்த உலகம் ஒரு பழமையானதும், பெரியதுமான கலாசாலையாகும். சூழ்நிலைகளுக்கேற்றபடி உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் புதிய புதிய பாடங்கள் பலாத்காரமாகப் போதிக்கப்படுகின்றன. இந்தப் படிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. சமூக நலமே குறிக் கோளாகக் கொண்டு வாழும் அறிஞர்கள் அவ்வப்போது பல விதத்தில் மக்களுக்கு நற்பயன் வி...

மன உறுதி

Image
ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்?  ஏன் அமைதியான, சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம்?  ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.         உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன், நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டுப் போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும், பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கிப் பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.         பின்னர் கடைத்தெருவுக்குப் போய்க் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால், அவற்றை வைக்கப் பையில் இடமில்லை. பையில்தான் ஏற்கனவே நிரப்பி விட்டீர்களே!  இப்போது உங்கள் பிரச்சினை என்ன?  ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு, எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா?  அல்லது, காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா?  கடை...

அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு.........

Image
இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு.         அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது?  சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன?  காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது.         அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான்.         எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் ...

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?

Image
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும். இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள் கிடைக்கும். அதிலிருந்து Show Original என்பதை தேர்வு செய்யவும். உடனே வலையுலாவியில் இன்னொரு விண்டோ திறக்கப்படும். அதில் நமக்கு வந்த மின்னஞ்சலின் என்கோடிங் (Encoding)செய்யப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும். கீழ் உள்ள படத்தில் உள்ள வட்டமிட்டுள்ள பகுதியில் Received from என்ற வரியில் நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை அனுப்பியவரின் ஐபி முகவரி எண் இருக்கும். அதை வைத்து ஒருவரின் ஐபி எண்ணை அறியலாம். அந்த ஐபி எண்ணை வைத்து தகவல்கள் பெற உதவும் வலைதளங்களின்(Tracing websites) மூலம் அது எங்கிருந்து வந்தது, நாடு, செர்வர் பெயர் போன்ற தகவல்களையும் பெற முடியும். www.cqcounter.com/whois தளத்தில் உங்களுக...

கரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

Image
இப்பொழுது கணினி பயன்படுத்துபவர்கள் பலரும் தகவல்களை சேமிக்க பயன்படுத்துவது CD,DVD,PEN DRIVE போன்றவை ஆகும். இதில் உள்ள தகவல்கள் சேதம் அடையும் போது , அதில் உள்ள தகவல்களை இழக்க நேரிடும். அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க CD/DVD/BlueRay Recovery என்னும் மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை தரவிறக்க : CD/DVD/BlueRay Recovery  இந் த மென்பொருளை தரவிறக்கி  இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  Start ->Allprograms -> CD/DVD/BlueRay Recovery  என்பதை ஒப்பன் செய்ய வேண்டும். ஒப்பன் செய்த பின் Add Folder என்பதை கிளிக் செய்து CD/DVD யில் உள்ள பைல்களை தேர்ந்தெடுக்கவும். பின் Browse என்னும் பொத்தானை கிளிக் செய்து Output எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். Coping Speed என்பதில் Normal லாக இருப்பதே நன்று. Start பட்டனை கிளிக் செய்தவுடன் CD/DVD ல் உள்ள பைல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிடும். இந்த CD/DVD/BlueRay Recovery யானது corrupted digital multimedia files, audio, video, image files, MPEG, AVI, RM, MP3, JPEG etc, and for damaged document and text files. ...

நெருப்பு நரி (Mozilla Firefox) Tips…

Image
  மோஸில்லா நெருப்பு நரி பிரவுஸரில் பயன்படுத்தகூடிய, Shortcut-கள்… Mozilla Firefox Configuration Tips and Tricks Mozilla Firefox Shortcuts Ctrl + Tab or Ctrl + PageDown : Cycle through tabs. Ctrl + Shift + Tab or Ctrl + PageUp : Cycle through tabs in reverse. Ctrl + (1-9) : Switch to tab corresponding to number. Ctrl + N : New window. Ctrl + T : New tab. Ctrl + L or Alt + D or F6 : Switch focus to location bar. Ctrl + Enter : Open location in new tab. Shift + Enter: Open location in new window. Ctrl + K or Ctrl + E : Switch focus to search bar. Ctrl + O : Open a local file. Ctrl + W : Close tab, or window if there's only one tab open. Ctrl + Shift + W : Close window. Ctrl + S : Save page as a local file. Ctrl + P : Print page. Ctrl + F or F3 : Open find toolbar. Ctrl + G or F3 : Find next... Ctrl + Shift + G or Shift + F3 : Find previous... Ctrl + B or Ctr...

ஆடியோவினை கம்யுட்டரில் தொடர்ந்து பதிவு செய்ய.........

Image
நாமே பாடலை பாடி நாமே நமது பாடலை கேட்பது தனி இன்பம். கம்யுட்டரிலேயே பதிவு செய்ய வசதி உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அது பதிவு ஆகும். மேற்கொண்டு பதிவு செய்ய அதை நாம் நீடிக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு அந்த குறையை போக்குகின்றது. 400 கே.பி. (அதாவது 1 எம்.பி.யில் பாதி) அளவே உள்ள இதை பதிவிறக்கம் செய்ய  இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யுட்டரில் நிறுவிய பின உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும இதில் மேற்புறம் உங்களுக்கு Input என்கின்ற பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் நீங்கள் உங்களுடைய Device தேர்வு செய்து கொண்டு பின்னர் நீங்கள் எதிலிருந்து பாடல்கள் பதிவு செய்ய போகின்றீர்களோ அதை தேர்ந்தெடுங்கள். அடுத்து உங்களுக்கு பாடல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ Output மூலம் அதனை தேர்வு செய்யுங்கள். இதிலுள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். சிடி பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள். எல்லாம் தயார் செய்துவிட்டீர்களா. இப்போது இதில் உள்ள ரெகார்ட் பட்டனை அழுத்து...

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

Image
புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எலக்ட்ரானிக் வழிபாடு

உலகமே எலக்ட்ரானிக் யுகத்தில் இருக்கிறது. சாமி கும்பிடுவதை மட்டும் ஏன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இந்த பிளாஷ் உதவியுடன் பிள்ளையார் வழிபாடு .

உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்........

Image
கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம். இத்தகைய  சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும். அத‌ன் பிற‌கு பார்த்தால் சாதார‌ண‌ பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும். சின்ன‌ திருத்த‌திற்கு பிற‌கு ப‌ழைய‌ப‌டி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்துவிடும். ஆனால் ச‌ம‌ய‌ங்களில் கோளாறுக்கான‌ கார‌ண‌த்தை க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடிக‌ளே திண‌றிப்போய் விடுவார்க‌ள். இப்ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளை விர‌க்தியி...

Screen printing

அதிசய மனிதர்

Image
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர் மார்க்பாயல் (31). கடந்த 2 வருடமாக இவர் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறார். இவர் இங்கிலாந்தின் பிரீசைக்கிள் அமைப்பு வழங்கிய "கேரவன்" வேனில் தங்கியுள்ளார். அந்த வேனை அங்குள்ள ஒரு பண்ணை அருகே நிறுத்தியுள்ளார். தேவையான உணவு பொருட்களை தானே பயிரிட்டு வளர்க்கிறார். விறகு அடுப்பு மூலம் சமையல் செய்கிறார். தனக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மூலம் தயாரித்து கொள்கிறார். துணியை குளிர்ந்த நீரில் ஊற வைத்து கையால் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறார். "இன்கம்மிங்" வசதியுடைய செல்போனையும், சூரிய ஒளியில் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டரையும் பயன்படுத்துகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக வேகன் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரது மனதில் உதித்ததுதான் பணம் தேவையில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் உதித்தது. இது குறித்து கூறியதாவது:- நண்பர்களுடன் உலகில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவேன். அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளினால் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், உலகநாடுகளிடையே...

பேரறிஞர் அண்ணா

Image
எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண்பட்ட அரசியல்வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். இவர், ஏழை எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் ...