Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

Labels

மலரும் நினைவுகள்

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
நடிகராக விரும்பி சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1975ஆம் ஆண்டு புத்தண்ணா கனகால் இயக்கிய 'கதா சங்கமா' என்ற கன்னட படத்தில் முதன் முதலாக நடித்தார். அதே ஆண்டில் தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி (1977), அவர்கள் (1977), 16 வயதினிலே (1977), காயத்ரி போன்ற படங்கள் அவரை மிகச்சிறந்த வில்லத்தனமான நடிப்பிற்காக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் (1978), ஆறிலிருந்து அறுபது(1979) வரை போன்ற படங்கள் அவர் நாயகனாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. பில்லா, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் அவர் அதிரடி நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தில்லுமுல்லு படம் இவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக உலகுக்கு வெளிக்காட்டியது. பில்லா இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'டான்' படத்தின் தமிழாக்கம் ஆகும். அமிதாபச்சனின் பிற படங்களான குத்-தார், நமக் ஹலால், லாவாரிஸ், திரிசூல் மற்றும் கஸ்மே வாதே போன்ற படங்கள் முறையே படிக்காதவன், வேலைக்காரன், பணக்காரன், மிஸ்டர் பாரத் மற்றும் தர்மத்தின் தலைவன் போன்ற பெயர்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. அவரின் 100 வது படமான ஸ்ரீ ராகவேந்திரர், சமயத்துறவி ராகவேந்திரரின் வாழ்க்கையைப் பற்றிய படமாகும்.

90களில் இவர் நடித்து வெளிவந்த அண்ணாமலை, பாட்ஷா, போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியது. இவ்விரு திரைப்படங்களும் இன்றளவிலும் திரையிடப்படும் இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் அமோக வெற்றி பெற்றது. ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் முத்து தான். ரஜினிகாந்த் தாமே திரைக்கதை அமைத்த படம் வள்ளி 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்து வெளிவந்த படம் படையப்பா மிகப்பெரும் வெற்றி பெற்றது. மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002ல் இவர் நடித்து வெளிவந்த பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் அடுத்து 2005 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது. 

     ரஜினிகாந்த், தமிழ் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் பிலட் ஸ்டோன் (Blood Stone) (1988). 

ரஜினிகாந்த் பெற்ற விருதுகள்
     படையப்பா, பெத்தராயடு, பாட்ஷா, முத்து, அண்ணாமலை, தளபதி, வேலைக்காரன், ஸ்ரீ ராகவேந்திரா, நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், 16 வயதினிலே ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் ரஜினிகாந்த். புவனா ஒரு கேள்விக்குறி நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். வள்ளி படத்திற்காக சிறந்த திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் விருதை வென்றுள்ளார்.

ரஜினிகாந்த் அவர்கள் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும், 1995 ஆம் ஆண்டு ரஜனீஷ் ஆசிரமத்தின் ஓஷோபிஸ்மிட் விருதையும், 1995ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் கலைச்செல்வன் விருதையும், 2007 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசின் ராஜ் கபூர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அளித்து கௌரவித்துள்ளது.

அரசியல்
     1990 களில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் வசனங்களிலும், பாடல்களில் அரசியல் கலந்து இருந்தது. 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் இவர் அப்போதைய ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் கூறிய கருத்து அத்தேர்தலில் அக்கட்சி தோற்பதற்கு ஒரு காரணமாயிற்று. அடுத்தடுத்த தேர்தல்களில் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை திட்டவட்டமாக எடுத்துக் கூறவில்லை. ஆனால் 2004ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாம் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்ததாக கூறினார். இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளால் இந்த காலக்கட்டங்களில் இவர் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.

ஆன்மீகம்
 ரஜினிகாந்த் அவர்கள் அரசியலை விட ஆன்மீகத்தில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொன்னால் மிகையாகாது. ஆரம்பம் முதலே அவர் ராகவேந்திரர், ராமகிருஷ்ணர் ஆகியோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார். அடிக்கடி இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் சென்று அங்கு தியானத்தில் ஈடுபடுவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

குடும்பம்
     1981 பிப்ரவரி 16ல் இவர் லதாவை தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.முதல் மருமகன் நடிகர் தனுஷ், இரண்டாவது மருமகன் அஸ்வின் ராம்குமார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள படங்களின் பட்டியல்
1. அபூர்வ ராகங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 18-08-1975
2. கதா சங்கமா - (கன்னடம் - புத்தண்ணா) - 23-01-1976
3. அந்துலேனி கதா - (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 27-02-1976
4. மூன்று முடிச்சு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 22-10-1976
5. பாலு ஜேனு - (கன்னடம் - குன்னிகல் நாக பூஷணம் பாலன்) - 10-12-1976
6. அவர்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 25-02-1977
7. கவிக்குயில் - (தமிழ் - தேவராஜ், மோகன்) - 29-07-1977
8. ரகுபதி ராகவன் ராஜாராம் - (தமிழ் - துரை) - 12-08-1977
9. சிலக்கம்மா செப்பண்டி - (தெலுங்கு - எரங்கி சர்மா) - 13-08-1977
10. புவனா ஒரு கேள்விக்குறி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 02-09-1977
11. ஒண்டு பிரேமதா கதா - (கன்னடம் - எஸ்.எம். ஜோ சிமோன்) - 02-09-1977
12. 16 வயதினிலே - (தமிழ் - பாரதிராஜா) - 15-09-1977
13. சகோதர சவல் - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 16-09-1977
14. ஆடு புலி ஆட்டம் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 30-09-1977
15. காயத்ரி - (தமிழ் - ஆர். பட்டாபிராமன்) - 07-10-1977
16. குங்கும ரக்சே - (கன்னடம் - எஸ்.கே.ஏ. சாரி) - 14-10-1977
17. ஆறு புஷ்பங்கள் - (தமிழ் - கே.எம். பாலகிருஷ்ணன்) - 10-11-1977
18. தொலிரேயி கடிச்சிண்டி - (தெலுங்கு - கே.எஸ். ராமி ரெட்டி) - 17-11-1977
19. ஆமே கதா - (தெலுங்கு - கே. ராகவேந்திர ராவ்) - 18-11-1977
20. கலாட்டா சம்சாரா - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 02-12-1977
21. சங்கர் சலீம் சைமன் - (தமிழ் - பி. மாதவன்) - 10-02-1978
22. கில்லாட் கிட்டு - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978
23. அன்னடம்முளு சவால் - (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978
24. ஆயிரம் ஜன்மங்கள் - (தமிழ் - துரை) - 10-03-1978
25. மாது தப்படமகா - (கன்னடம் - பெக்கட்டி சிவராம்) - 31-03-1978
26. மாங்குடி மைனர் - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 02-06-1978
27. பைரவி - (தமிழ் - எம். பாஸ்கர்) - 02-06-1978
28. இளமை ஊஞ்சலாடுகிறது - (தமிழ் - ஸ்ரீதர்) - 09-06-1978
29. சதுரங்கம் - (தமிழ் - துரை) - 30-06-1978
30. வணக்கத்துக்குரிய காதலியே - (தமிழ் - திரிலோகசந்தர்) - 14-07-1978
31. வயசு பிலிசிண்டி - (தெலுங்கு - ஸ்ரீதர்) - 04-08-1978
32. முள்ளும் மலரும் - (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1978
33. இறைவன் கொடுத்த வரம் - (தமிழ் - ஏ. பீம்சிங்) - 22-09-1978
34. தப்பிட தலா - (கன்னடம் - கே. பாலச்சந்தர்) - 06-10-1978
35. தப்புத் தாளங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 30-10-1978
36. அவள் அப்படித்தான் - (தமிழ் - சி. ருத்ரய்யா) - 30-10-1978
37. தாய் மீது சத்தியம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 30-10-1978
38. என் கேள்விக்கு என்ன பதில் - (தமிழ் - ஆர். மாதவன்) - 09-12-1978
39. ஜஸ்டிஸ் கோபிநாத் - (தமிழ் - யோகானந்த்) - 16-12-1978
40. ப்ரியா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-12-1978
41. ப்ரியா - (கன்னடம் - எஸ்.பி. முத்துராமன்) - 12-01-1979
42. குப்பத்து ராஜா - (தமிழ் - ராமண்ணா) - 12-01-1979
43. இதாரு அசாத்யுலே (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 25-01-1979
44. அலாவுதினும் அற்புத விளக்கும் - (மலையாளம் - ஐ.வி. சசி) - 14-04-1979
45. நினைத்தாலே இனிக்கும் (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 14-04-1979
46. அந்தமைனா அனுபவம் (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 19-04-1979
47. அலாவுதினும் அற்புத விளக்கும் - (தமிழ் - ஐ.வி.சசி) - 08-06-1979
48. தர்ம யுத்தம் - (தமிழ் - ஆர்.சி. சக்தி) - 29-06-1979
49. நான் வாழவைப்பேன் - (தமிழ் - டி. யோகானந்த்) - 10-08-1979
50. டைகர் - (தெலுங்கு - என். ரமேஷ்) - 05-09-1979
51. ஆறிலிருந்து அறுபது வரை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-09-1979
52. அன்னை ஓர் ஆலயம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 19-10-1979
53. அம்மா எவரிக்கைன அம்மா - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 08-11-1979
54. பில்லா - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1980
55. ராம் ராபர்ட் ரஹீம் - (தெலுங்கு - விஜய நிர்மலா) - 31-05-1980
56. அன்புக்கு நான் அடிமை - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 04-06-1980
57. காளி - (தமிழ் - ஐ.வி. சசி) - 03-07-1980
58. மாயதாரி கிருஷ்ணடு - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 19-07-1980
59. நான் போட்ட சவால் - (தமிழ் - புரட்சிதாசன்) - 07-08-1980
60. ஜானி (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1980
61. காளி (தெலுங்கு - ஐ.வி. சசி) - 19-09-1980
62. எல்லாம் உன் கைராசி - (தமிழ் - எம்.ஏ. திருமுகம்) - 09-10-1980
63. பொல்லாதவன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 06-11-1980
64. முரட்டு காளை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-12-1980
65. தீ - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1981
66. கழுகு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 06-03-1981
67. தில்லு முல்லு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 01-05-1981
68. கர்ஜனை - (தமிழ் - சி.வி. ராஜேந்திரன்) - 06-08-1981
69. கர்ஜனம் - (மலையாளம் - சி.வி. ராஜேந்திரன்) - 14-08-1981
70. நெற்றிக்கண் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-08-1981
71. கர்ஜனே - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 23-10-1981
72. ராணுவ வீரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 26-10-1981
73. போக்கிரி ராஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1982
74. தனிக்காட்டு ராஜா - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 12-03-1982
75. ரங்கா - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1982
76. புதுக்கவிதை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 11-06-1982
77. எங்கேயோ கேட்ட குரல் - (தமிழ் - எஸ்.பி.முத்துராமன்) - 14-08-1982
78. மூன்று முகம் - (தமிழ் - ஏ. ஜகந்நாதன்) - 01-10-1982
79. பாயும் புலி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1983
80. துடிக்கும் கரங்கள் - (தமிழ் - ஸ்ரீதர்) - 04-03-1983
81. அந்தா கானூன் - (இந்தி - டி. ராம ராவ்) - 07-04-1983
82. தாய் வீடு - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1983
83. சிவப்பு சூரியன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 27-05-1983
84. ஜீத் ஹமாரி - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 17-06-1983
85. அடுத்த வாரிசு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-07-1983
86. தங்க மகன் - (தமிழ் - ஏ. ஜெகந்நாதன்) - 04-11-1983
87. மேரி அதாலத் - (இந்தி - ஏ.டி. ரகு) - 13-01-1984
88. நான் மகான் அல்ல - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1984
89. தம்பிக்கு எந்த ஊரு - (தமிழ் - ராஜசேகர்) - 20-04-1984
90. கை கொடுக்கும் கை - (தமிழ் - மகேந்திரன்) - 15-06-1984
91. எதே நாசவல் - (தெலுங்கு - புரட்சிதாசன்) - 15-06-1984
92. அன்புள்ள ரஜினிகாந்த் - (தமிழ் - கே. நட்ராஜ்) - 02-08-1984
93. கங்குவா - (இந்தி - ராஜசேகர்) - 14-09-1984
94. நல்லவனுக்கு நல்லவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-10-1984
95. ஜான் ஜானி ஜனார்த்தன் - (இந்தி - டி. ராம ராவ்) - 26-10-1984
96. நான் சிகப்பு மனிதன் - (தமிழ் - எஸ். ஏ. சந்திரசேகர்) - 12-04-1985
97. மஹாகுரு - (இந்தி - எஸ். எஸ். ரவிச்சந்திரா) - 26-04-1985
98. உன் கண்ணில் நீர் வழிந்தால் (தமிழ் - பாலுமகேந்திரா) - 20-06-1985
99. வபாதார் - (இந்தி - தாசரி நாராயண ராவ்) - 01-09-1985
100. ஸ்ரீராகவேந்திரா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 01-09-1985

101. பேவஃபாய் - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 20-09-1985
102. படிக்காதவன் - (தமிழ் - ராஜசேகர்) - 11-11-1985
103. மிஸ்டர் பாரத் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 10-01-1986
104. நான் அடிமை இல்லை - (தமிழ் - துவாரகீஷ்) - 01-03-1986
105. ஜீவன போராட்டம் - (தெலுங்கு - ராஜசந்திரா) - 10-04-1986
106. விடுதலை - (தமிழ் - கே. விஜயன்) - 11-04-1986
107. பகவான் தாதா - (இந்தி - ஜே. ஓம் பிரகாஷ்) - 25-04-1986
108. அசலி நக்லி - (இந்தி - சுதர்சன் நாக்) - 17-10-1986
109. தோஸ்தி துஸ்மன் - (இந்தி - டி. ராம ராவ்) - 31-10-1986
110. மாவீரன் - (தமிழ் - ராஜசேகர்) - 01-11-1986
111. வேலைக்காரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-03-1987
112. இன்சாப் கோன் கரேகா - (இந்தி - சுதர்சன் நாக்) - 19-06-1987
113. ஊர்க்காவலன் - (தமிழ் - மனோபாலா) - 04-09-1987
114. மனிதன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 21-10-1987
115. உத்தர் தக்ஷின் - (இந்தி - பிரபாத் கன்னா) - 13-11-1987
116. தமாசா - (இந்தி - ரமேஷ் அஹுஜா) - 26-02-1988
117. குரு சிஷ்யன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 13-04-1988
118. தர்மத்தின் தலைவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 24-09-1988
119. பிளட் ஸ்டோன் - (ஆங்கிலம் - டுவைட் லிட்டில்) - 07-10-1988
120. கொடி பறக்குது - (தமிழ் - பாரதிராஜா) - 08-11-1988
121. ராஜாதி ராஜா - (தமிழ் - ஆர். சுந்தர் ராஜன்) - 04-03-1989
122. சிவா - (தமிழ் - அமீர்ஜான்) - 05-05-1989
123. ராஜா சின்ன ரோஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-07-1989
124. மாப்பிள்ளை - (தமிழ் - ராஜசேகர்) - 28-10-1989
125. பிரஸ்டாச்சார் - (இந்தி - ரமேஷ் சிப்பி) - 01-12-1989
126. சால்பாஸ் - (இந்தி - பங்கஜ் பராசார்) - 08-12-1989
127. பணக்காரன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1990
128. அதிசய பிறவி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-06-1990
129. தர்மதுரை - (தமிழ் - ராஜசேகர்) - 14-01-1991
130. ஹம் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-02-1991
131. பரிஸ்தே - (இந்தி - அனில் சர்மா) - 22-02-1991
132. கூன் கா கர்ஜ் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-03-1991
133. பூல் பனே அங்காரே - (இந்தி - கே.சி. பொகாடியா) - 12-07-1991
134. நாட்டுக்கு ஒரு நல்லவன் - (தமிழ் - வி. ரவிச்சந்திரன்) - 02-10-1991
135. தளபதி - (தமிழ் - மணிரத்னம்) - 05-11-1991
136. மன்னன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1992
137. தியாகி - (இந்தி - கே.சி. பகோடியா) - 29-05-1992
138. அண்ணாமலை - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 27-06-1992
139. பாண்டியன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 25-10-1992
140. இன்சானியத் கே தேவ்தா - (இந்தி - கே.சி. பகோடியா) - 12-02-1993
141. எஜமான் - (தமிழ் - ஆர்.வி. உதயகுமார்) - 18-02-1993
142. உழைப்பாளி - (தமிழ் - பி. வாசு) - 24-06-1993
143. வள்ளி - (தமிழ் - கே. நட்ராஜ்) - 24-06-1993
144. வீரா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 14-04-1994
145. பாட்ஷா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 12-01-1995
146. பெத்தராயுடு - (தெலுங்கு - பி. ரவிராஜ்) - 15-06-1995
147. ஆதங்க் ஹீ ஆதங்க் - (இந்தி - திலீப் சங்கர்) - 04-08-1995
148. முத்து - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 23-10-1995
149. பாக்யதேவ்தா - (பெங்காலி - ரகுராம்) - 23-12-1995
150. அருணாச்சலம் - (தமிழ் - சுந்தர்.சி) - 10-04-1997
151. படையப்பா - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 10-04-1999
152. பாபா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 15-08-2002
153. சந்திரமுகி - (தமிழ் - பி. வாசு) - 14-04-2005
154. சிவாஜி - (தமிழ் - சங்கர்) - 15-06-2007
155. குசேலன் - (தமிழ் - பி. வாசு) - 01-08-2008
156. எந்திரன் - (தமிழ் - சங்கர்) - 2010

நன்றி: பல இணையதளங்கள், கூகிள் தேடல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீள்பதிவு.

''போதிதர்மா'' வரலாறு ....

போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.
 
போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போதிதர்மாவின் கதையை ‘non-linear’ அமைப்பில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

போதிதர்மாவுக்கும் குங்ஃபூ கலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் பார்ப்போம். தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா (ஆம், போதிதர்மா ஒரு தமிழர்!) மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. (இது என்ன வகை தியானமோ தெரியவில்லை. ஓஷோ இந்த தியானத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கம்பம் நகரில் அடங்கியுள்ள சூஃபி மகான் அம்பா நாயகம் (ரஹ்) அவர்கள் இதுபோல் சுவற்றைப் பார்த்தபடி பல வருடங்கள் அமர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை (insight) இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்!

இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி!

புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும். உதாரணமாக, இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)

புத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார். 

அரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.

தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.

ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும்! சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தைக் கூறும் நபிமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது: “செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.” (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப் பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)

போதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். தேநீர் என்பது சீனர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. ஜென் நெறியில் தேநீர் என்பது விழிப்புணர்வின், ஞானத்தின் குறியீடு. அலுவலகங்களில் நாமும்கூட கொஞ்சம் அசமந்தமாக உணர்ந்தால் தேநீர் பருகிவர கடை நோக்கி நடையைக் கட்டுகிறோம் அல்லவா? ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம்! நரகத்தில் தள்ளிவிடக்கூடிய பாவம். தேநீர் பருகுவது என்பது அவர்களுக்கு ஒரு நுட்பமான கலை, ஆழமான தியானம், ஒருவகை தாம்பத்ய சம்போகம்! 

மேலும், அவர்கள் அருந்துவது ஆங்கிலேயன் விரும்பிப் பருகும் தூசித் தேநீர் (dust tea) அல்ல. அவர்கள் பருகுவது பச்சைத் தேநீர் (Green Tea) அல்லது வெண் தேநீர் (White Tea). நான் ஒரு தேநீர்ப் பைத்தியம். பழச் சுவை கொண்ட தேநீர், பூக்களின் மணம் கொண்ட தேநீர், பெர்கமாண்ட் என்னும் சிட்ரஸ் பழம் போட்ட ‘ஏர்ல் க்ரே’ தேநீர், இஞ்சி-புதினா-எலுமிச்சை போட்ட பச்சைத் தேநீர், கெமோமைல் போட்ட பச்சைத் தேநீர் என்று விதவிதமான தேநீர் வாங்கி வைத்து அவ்வப்போது பருகுவேன். அவற்றில் மிகவும் விரும்பிப் பருகுவது க்ரீன் டீதான். என் பிள்ளைகளும் அதற்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். (வெண் தேநீர் தேச்செடியின் பூக்களில் இருந்து எடுக்கப்படுவது. அதைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆசை இன்னும் நிறைவேறவில்லை.)

சரி, தேநீரை போதிதர்மா எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்ப்போம். இது ஒரு தொன்மக் கதையாக ஜென் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

போதிதர்மா ஒரு முரட்டு மனிதர் என்பதை முன்பே சொன்னேன். அவர் தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். மகாத்மா காந்தி வைத்திருப்பது போன்று வழவழப்பான நேரான கைத்தடி அல்ல அது. காந்திஜி வைத்திருந்தது அஹிம்ஸா கைத்தடி. போதிதர்மா தன்னைப் போலவே கரடு முரடான கைத்தடி வைத்திருந்தார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்! (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)

இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர்வழியாக நமக்குத் தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது. சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!

போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.
போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான். ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்தான்” என்பதுதான் அவரது போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
 
போதிதர்மாவின் ஞானம் மிளிரும் பல நூறு பொன்மொழிகளை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மரியாதைக்காக இங்கே ஏழு மட்டும் தருகிறேன் (ஏழாம் அறிவு என்று வந்துவிட்டதால் ஏழு):

இன்று வலையுலகில் அதிகம் பேர் கூகுளில் தேடும் பெயர் போதி தர்மன்

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.
அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.
போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் ‘பாமீர் முடிச்சு’ பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்…

உன் மனதில் தெரியாமல் போவேனோ..!

                                            துள்ளித் திரிந்த காலங்கள் - என்
                                                        சொர்க்க வாழ்வின் வசந்தங்கள்
                                            பள்ளிப் பிராயப் பொழுதிலே - உன்
                                                         பார்வைப் படத் துடித்தேனே!
                                            எள்ளி நகையாடிச் சிரித்தே - என்னை
                                                         ஏளனம் செய்திட்டோர் ஏராளம்
                                            அள்ளி அணைத்திடத் தோணும் - நீ
                                                         ஆறுதல் கூறும் போதினிலே!

                                            வடமில்லா தேராய் ஆடிய என்னை
                                                          நிலைநிறுத்தி நிற்க வைத்தாய்
                                            தடத்தில் செல்லும் வாகனமாய் - உன்
                                                         காலடிதனில் நடக்க வைத்தாய்
                                            நடத்தை தனை மாற்றி வைத்து
                                                         நல்லவனாய் மாற்றி விட்டாய் 
                                           குடத்தில் இட்ட விளக்காய் இருந்தென்னை
                                                        குன்றின் மீதேறி  வைத்தாய்

                                            தாவணி காற்றிலே ஆட - நான்
                                                        தாளத்துடன் பின்பாட்டு பாட
                                            லாவணி பாடி மகிழ்ந்தோமே - நீயும்
                                                        நானும் இணைந்திடுவோம் என்றெண்ணி
                                           ஆவணி மாதத்  திருமணமாம் - உன்
                                                       அழைப்பிதழை அனுப்பி வைத்தாய் 
                                           பூமணி நீயும் என்நெஞ்சில் - பாயும் 
                                                        ஈட்டியால் குத்தி விட்டாய். 

                                           கண்ணிலே தெரியுது காலம் - என்
                                                         கனவுகளில் உன் நினைவுக்கோலம்
                                           எண்ணிக் கழிக்கிறேன் நினைவுகளில்  - நீ
                                                         என்னை வருடுகிறாய் கனவுகளில்
                                           விண்ணில் தோன்றும் விண்மீன்களில்
                                                        விடிவெள்ளி போன்று ஒளிருகிறாய்
                                           மண்ணிலே தெரியுது வானம் - உன்
                                                        மனதில் தெரியாமல் போவேனோ..!
rishvan.com

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு நாம் ஏன் உதவக்கூடாது?‏

ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.
சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (FTT) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.
உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..
உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hK9hiMpCZp6GAiO8HBQAxT_O1Jmw?docId=93b79e4575dd43b2a71486e26d474a20
http://www.wtsp.com/news/national/article/204731/81/29000-children-dead-from-famine-in-Somalia
http://www.unfoundation.org/
http://www.unicefusa.org/

http://www.salem-news.com/articles/august092011/help-somalia-cf.php
உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்
Somali refugees need your help now!
End Famine in Somalia - Somalia Famine: Millions are hungry!
Somalia Emergency - Food and shelter urgently needed!
United Nation High commission for Refugees (UNHCR)
International Committee of the Red Cross (ICRC)
Somalia's Children Caught in the Crossfire

முத்தமிழ் - சென்னை                                                                     தமிழ்ச் சாரல்.காம்

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே"

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.