இது குறித்து லான்சட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2.15 லட்சம் மக்கள் சோர்வுப் பிரச்சனை மற்றும் மறதி குறைபாடுகளில் அவதிப்படுகிறார்கள். இவர்கள் இத்தகைய பாதிப்பு அடைவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சோர்வடையும் குறிப்பிட்ட நபரின் எண்ணம் மற்றும் செயலில் மாற்றம் ஏற்படுத்தும் சி.பி.டி தெரபியை மேற்கொள்ளும் போது தீவிர சோர்வு நீங்குகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிகிச்சை மிகச்சிறந்த பலனை தந்துள்ளதாக லான்சட் இதழின் ஆய்வு அறிக்கை எழுதியுள்ள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட தெரபி சிகிச்சை மூலம் சோர்வு மட்டுமல்லாமல் அவர்களது உடல் ரீதியான செயல்பாடும் வேகம் அடைகிறது என கூறப்படுகிறது. தீவிர சோர்வு நிலைக்கான எம்.இ செயல் அமைப்பும் இந்த ஆய்வு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது என விமர்சித்து உள்ளது. |
சோர்வை நீக்குவதற்கு புதிய தெரபி முறை
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment