Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

மூலப்பொருள் விலை உயர்வு: சிவகாசியில் அச்சுத்தொழில் தேக்கம் !

சிவகாசி: காகித அட்டை விலை உயர்வால் சிவகாசியில் அச்சுத் தொழிலில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டி, ஸ்வீட் பாக்ஸ், மருந்துப் பெட்டி, தேயிலைப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு பெட்டிகளை தயாரிக்க காகித அட்டை பயன்படுத்தப்படுகிறது.
இந்த அட்டையில், தேவையானவற்றை ஆப்செட் அச்சகங்களில் அச்சிட்டு, இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர்.

சிவகாசியில் இத்தகைய பணிகளை மேற்கொள்வதற்காக காகித அட்டை தினசரி சுமார் 600 டன் தேவை.
சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காகித அட்டை வாங்கப்படுகிறது.
இந்த அட்டைகள் டன் ஒன்றுக்கு ரூ. 28 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரம் வரை தர வாரியாக உள்ளன.

கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை டன் ஒன்றுக்கு ரூ. 2,000 விலை கூடியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிவகாசியில் உள்ள அச்சு நிறுவனங்கள் தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களிடம் தேவைக்கு ஏற்ப, சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் பெறுவார்கள்.

பள்ளிக்குத் தேவையான நோட்டுப் புத்தக அட்டைகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் பெறுவார்கள்.

ஆர்டர் பெறும்போது காகித அட்டை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலை நிர்ணயிக்கப்படும்.
தற்போது விலை உயர்ந்துள்ளதால், ஆர்டர் எடுத்த விலைக்கு விநியோகிக்க முடியாமல், அச்சகத்தார் அவதிப்படுகின்றனர். மூலப் பொருள் விலை உயர்வு போன்றவற்றால் அட்டை விலையை உயர்ந்த வேண்டிய நிலை உள்ளது என அட்டை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சகத்தார் ஆர்டர் பெற்ற விலைக்கு பொருள்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விலை உயர்த்தப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் தான் அச்சுத் தொழில் பாதிக்காது என அச்சக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்: