Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

மைதமிழ் வானொலி

இன்றை நவீன உலகமயமாக்கலில் இணையத்தின் செயற்பாடு அதீத வளர்ச்சியடைந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

முன்னொரு காலத்தில் ரோடியோ என்பது ஒர் அறையில் மிகப் பெரும் சாதனமாக பெரிய விடயமாக இருந்தது. படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று இணையமே எல்லாம் என்ற ஓர் நிலைக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் இன்று மிகவும் பிரபலமாக பேசுப்படுவது இணைய வானொலியாகும். ஓர் கணனியும் இணைய இணைப்பும் இருந்தாலே போதும் இச்சேவையினை பெற.

இணைய வானொலி

ஒர் ரோடியோவில் பல அலை வரிசைகளை கேட்பது போன்று இணைய வானொலியிலும் எமக்கு பிடித்தமான ஒலிபரப்புக்களை கேட்டு மகிழும் வசதி உள்ளது.


மைதமிழ் வானொலியின் மென்பொருளின் சிறப்பு

பல வகையான இணைய வானொலிகள் இருந்தாலும் இவ் வானொலியில் ஓர் தனித்துவ சிறப்பு உண்டு. அதாவது இணைய உலாவி சென்று இணையத்தள முகவரியை தட்டச்சு செய்து தேவையான வானொலியை தெரிவு செய்யும் சிரமம் இங்கு இல்லை. எமது டெஸ்டொப்பில் உள்ள மைதமிழ் என்ற icon னை அழுத்துவதன் மூலம் இதனை செயற்படுத்த முடியும். அதுமட்டுமன்றி இணைய வாசகர்களுக்கு மிகவும் பரீட்சயமான இணைதள முகவரிகளும் அதில் வரும் முக்கிய செய்திகளும் இதில் காட்சிபடுத்தப்படுகின்றது. எமக்கு தேவையான செய்தியை சொடுக்குவதன் மூலம் நேர விரயத்தை இங்கு தவிர்த்துக் கொள்ளலாம்.

இதனை உங்கள் கணனியில் செயற்படுத்தும் முறை

முதலில் .net framework4.0 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் மைதமிழ் என்று மென்பொருளினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்

செயற்படுத்தல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இச் சுட்டியில் சென்று பாருங்கள்

http://www.mytamilsoft.com/mytamil/

Google+




பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம்மொன்றை உருவாக்கி மட்டுபடுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு பரிசோதனைக்காக உபயோகத்திற்கு விட்டது கூகுள்.
கூகுள் பிளஸ் பற்றிய சில தகவல்கள் இங்கே

சமூகவலை பேஸ்புக் தளத்திற்கு சிறந்த மாற்றீடாக இது அமையுமாம்.

இலகுவாக அனைத்து நண்பர்களுடனும் இணைப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.


கூகுள் + பேஸ்புக் போன்று நியூஸ் பீட்ஸ் புரோபைல் படங்கள் போன்றவற்றை தந்தாலும், எல்லா நண்பர்களும் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை.
பேஸ்புக் பிரபலமாக ஆக பிரைவசி தொடர்பில் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கியது. ஆனால் பிரைவசி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கின்றதாம் கூகுள் +.......

கூகுள் பிளஸ் பற்றிய ஏனைய விபரங்களை வலைப்பதிவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்.

கூகிள் ப்ளஸ் என்றால் என்ன?
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.


என்னென்ன வசதிகள்?

ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.


இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய Demo பார்க்க
இங்கு க்ளிக் செய்யவும்.

கணிதத்தை கற்றுக் கொடுக்கும் இணையதளம்

கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா,
கவலை வேண்டாம் புதிய பரிமாணத்தில்
கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற
வருகிறார்கள் இணைய கணணி ஆசிரியர்கள்.
சாதாரண பெருக்கல் கூட நமக்கு வராது என்று
சொல்லும் நபர்கள் முதல் கணக்கு என்றாலே
அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு
கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய
முடியாது என்று சொல்லும் அனைவருக்கும்
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும்,
ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது
என்று மாணவர் கூறினால் அறிவியல்
சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை
மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால்
நன்றாக இருக்காது.
சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா
மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இதைப்போல் தான் கணித்ததை வேடிக்கையாக
மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம்.
இங்கு சென்று சாதாரண பெருக்கல் கூட
வித்தியாசமாக செய்ய சொல்லி
கொடுக்கின்றனர்.
இயற்கணிதம்(Algebra), வடிவியல்(Geometry)
வரை அத்தனையையும் வித்தியாசமாகவும்
வேடிக்கையாகவும் அனிமேசனுடனும்
சொல்லிக் கொடுக்கின்றனர்.
கணிதம் என்றால் அலர்ஜி என்று
சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு
சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம்
என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல்
http://www.mathsisfun.com/

மே18‍‍: தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை !

tamil-tamil-18-05-11
இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினத்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது. தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர்.

உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே. தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

மாவிலாற்றில் தொடங்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள் செய்த ஊக்கிவிப்பும் சாதாரணமானவையல்ல. மனிதாபிமான போர் என்று வாய்கூசாமல் சிங்கள அரசால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரை இந்த வேளையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்துவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் இருந்தும் பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கருதி பல வல்லரசு நாடுகள் மௌனமாக இருப்பதன் பின்னணி தமிழினப்படுகொலைக்கான போரில் அவர்களுக்கிருக்கும் முக்கியத்துவமே.

இந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும். கொலையாளியை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அதன் பின் பங்காளிகளின் பொய் முகமூடிகள் தானாகவே கிழிக்கப்படும்.

இனப்படுகொலை என்றால் என்ன?

இனப்படுகொலை நடாத்திய அரசை எப்படி சட்டத்தின் முன் கையாளலாம்? என்ற தெளிவான சிந்தனை எமக்கு இருக்கவேண்டும். ஒரு தேசிய இனம், வகுப்பு, மதம் சார்ந்தோரை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்யப்படும் அத்தனை வன்செயலும் இனப்படுகொலை என்ற வட்டத்திற்குள் அடங்கும். இந்த வன்செயல் எப்படிப்பட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்றில்லை எத்தனைபேர் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லை, சாமாதான காலத்திலும் நடைபெறலாம் போர்க்காலத்திலும் இந்த வன்முறை நடைபெறலாம்.
ஆக ஒரு இனக்குழுமத்தின் மேல் அந்த மக்களை அழிப்பதற்கு செய்யும் அத்தனை வன்முறைகளும் இனப்படுகொலை என்ற சட்ட சொல்லாடலினுள் தான் அடக்கப்படும். “உலக நீதிமன்று” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்ரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293, 294 பந்திகளில் இனப்படுகொலைக் (Genocide) குற்றத்திற்கு மில்லியன் கணக்கானோரை கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7000 பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்படுகொலை குற்றமாக கணிப்பிடுவதற்கு போதுமானவர்கள் என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.

தமிழர் மீது நடந்த படுகொலைகள் இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சிங்கள அரசின் கைகளில் வழங்கப்பட்ட பின் படிப்படியாக தமிழர்களின் உரிமைப்பறிப்பும் தமிழர்கள் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 50 களில் நடந்த கலவரங்களும் 83 காலப்பகுதிகளில் நடந்த கலவரங்களும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே. இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இது வரை வெளிவரவில்லை என்பதோடு அது சம்மந்தமாக நியாயமான விசாரணைகள் நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர இந்தி ராணுவத்தின் வருகையும் அதன்பின் இந்திய மற்றும் சிறிலங்கா ராணுவத்தாலும் பல வழிகளில் கொலைசெய்யப்ட்ட மக்கள் தொடர்பில் புள்ளிவிரங்களினூடான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்ட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த காலப்பகுதிளில் காணாமற்போன பல நூறு இளைஞர்கள் யுவதிகள் குறித்த தகவல்களும் இதுவரை இல்லை.
இரண்டு அரசாங்களினால் தமிழ் இனக்குழுமத்தின் மீது நடாத்தப்ட்ட பல படுகொலைகளின் பின் தமிழர்கள் மீதான இன அழிப்பை சிறிலங்கா அரசு தனது கையில் எடுப்பதான செயற்பாடுகள் நடக்கின்றன. அதாவது தமிழர்கள் மீதான எல்லாவழியிலான இன அழிப்பையும் சிறிலங்கா அரசு முன்னின்று செய்ய அவர்களுக்கு பின்புல பலமான பங்காளிகள் இருக்கின்றனர். யாழ்ப்பாணம் மீதான சிறிலங்கா ராணுவத்தின் படையெடுப்பின் போது நடைபெற்ற மக்கள் அவலம் என்பது தெற்காசியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மக்கள் அவலம் என்று சொன்னால் மிகையாகாது.

யாழ்ப்பாணம் மீது செய்யப்ட்ட மாபெரும் படையெடுப்பில் மக்கள் ஆங்காங்கே செத்துவீழ்ந்தனர். பாடசாலைகள், தேவாலயங்கள், கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு குண்டுவீசி மக்களை கொன்று குவித்தது. போதிய அளவு தொழினுட்ப வசதியின்மை, தொடர்பாடல் வசதியின்மையால் யாழ்ப்பாணத்தின் மீது செய்யப்பட்ட படையெடுப்பில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய தரவுகள் போதிய அளவு உலகத்திற்கு தெரியவரவில்லை.

கொலைசெய்யப்ட்டோர், காணாமல் போனோர், படுகாயமடைந்தோர் என எண்ணுக் கணக்கற்று தமிழர்கள் பாதிக்கப்ட்டனர். தமிழர்கள் மேல் நடந்தேறிய இனப்படுகொலைகளில் யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்கா அரசு செய்த போரும் ஒன்று. இந்த நிலையில் தமிழ்ர்கள் மீதான முழுவீச்சுடனான இனப்படுகொலைக்கான போர் மீண்டும் மாவிலாற்றில் இருந்து ஆரம்பிப்பட்டது. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் மாத்திரம் 100000 ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காரணம் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் கொல்லப்பட்டவர்கள் குறித்த எல்லா தகவல்களும் தகவல்கள் சேகரிக்கும் குழுவினருக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த போரில் கொல்லப்ட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். அங்கங்களை இழந்தனர். காயமடைந்தவர்களையும் கடத்திக்கொன்ற சிறிலங்கா அரசு போர் முல்லைத்தீவுக்குள் குறுகிக்கிடந்த காலப்பகுதிகளில் கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை சங்க உள்ளுர்பிரதிநிதிகளின் உதவியுடன் காயப்படும் ஒரு தொகுதியினர் திருகோணமலை புல்மோட்டைக்கும் மற்ற ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கும் அனுப்பப்ட்டனர்.

ஏராளமானோர் வெளியேற்றப்படுவதற்கான வாகன வசதியோ பாதுகாப்பு வசதியோ எதுவுமின்றி செத்துக் கொண்டே இருந்தனர். இந்த காலப்பகுதிகளில் காயமடைந்து வந்தவர்களையும் சிறிலங்கா அரசு தரம் பிரித்தது. வயது பாகுபாட்டில் தரம்பிரித்த அரசு பின் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற வகையில் தரம்பிரித்தது. தரம் பிரிக்கப்ட்டவர்கள் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் அனுராதபுரம் மற்றும் சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்ட்டனர்.

அப்படி மாற்றப்ட்ட யாருமே அந்த காலப்பகுதிகளில் திரும்பிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்டு வருபவர்களுடன் உறவினர்கள் பெரும்பாலும் வருவதில்லை. உறவினர்கள் வருவதற்கு வாகனத்தில் இடம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி யாருமற்று காயப்பட்டு வந்த உறவுகள் குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. அதனால் சிங்கள அரசு கச்சிதமாக தனது படுகொலை நடாத்தியது. காயப்பட்டு மக்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா ராணுவம் வவுனியா பிரதேசத்தில் மணல் ஏற்றும் டிப்பர் உரிமையார்கள் சிலரை தமக்கு சில பொருட்கள் ஏற்றுவதற்கென்று அவர்களை அழைத்துச் சென்றனர்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் பின் இரவு நேரங்களில் காடுகளுக்கூடாக தமது டிப்பர் பயணித்ததாகவும் தாம் சொன்ன அவர்கள் தாம் வீடு திரும்பி டிப்பரை பார்த்த போது டிப்பரில் இருந்த மணலில் எல்லாம் ரத்தம் இருந்ததாக அந்த வாகன உரிமையாளர்கள் சொன்னார்கள். ஆக படுகொலை செய்யப்ட்ட பலர் காடுகளுக்குள் எரித்து அழிக்கப்ட்டுள்ளனர். தவிர சிறு காயப்பட்டு வந்த பலரின் அங்கங்கள் முழுமையாக அகற்றப்ட்டன. வவுனியா மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அப்போது வெளிடப்பட்டபோதும் ஓரிரு நாட்களில் பலர் அந்த வைத்தியசாலைகளில் இருக்கவில்லை.

பலரை சிவில் உடையில் வந்து அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதை பார்த்தாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தார்கள். தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்டம் இப்படி பல வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது. முகாம்களின் நிலை எந்த வசதியுமற்று வெட்டவெளிப்பிரதேசத்தில் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டு முழுநேர ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் மக்கள் அடைக்ப்பட்டனர். வெளிமக்களின் நேரடித் தொடர்பை துண்டித்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தனிமைப்படுத்துவதில் சிறிலங்கா படையினர் முழுநேர கண்காணிப்பில் இருந்தனர்.

இராணுவ துணைக்குழுக்களின் உதவியுடன் இடம்பெர்ந்து வந்த மக்களை வடிகட்டிபிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா புலானாய்வுப் பிரிவினர் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் புலிகளின் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் சரணடையுமாறும் ஒரிரு நாட்களில் விசாரணை முடிந்துவிடும் என்றும் பின் அனைவரும் விடுவிக்கப்டுவர் என்றும் அறிவித்தனர். இதை நம்பிய மக்கள் மாணவர் முதலுதவிப் படையில் இருந்து எல்லைப்படைவரை அனைவரும் சரணடைந்தனர். ஏறத்தாள எல்லா இளைஞர் யுவதிகளுமே சிறிலங்கா புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு தம்மை பதிவு செய்தனர்.

தம்மை முதலே விடுதலைப்புலிகள் என இனம்காட்டிய ஒரு தொகுதியினரை சிறிலங்கா ராணுவம் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி வளாகத்தில் இருந்த முகாமில் அடைத்து வைத்திருந்தது. மற்றய ஒரு தொகுதியினரை ரஜரட்ட பிரதேச காட்டுப்பகுதிக்கு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாற்றியதாக அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் கூறினர் ஆனால் அப்படி மாற்றப்பட்டவர்களின் பெயர்விபரங்களோ எண்ணிக்கையோ யாருக்கும் தெரியாது. தவிர முகாம்களில் தமது பெயரை பதிவு செய்தவர்களை கைது செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறை அதில் இனங்காணப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரை ரகசிய முகாம்களுக்கு மாற்றியதோடு மிகுதி ஆயிரக்கணக்கானோரை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் சிறைவைத்தனர்.

இதில் ரகசிய முகாம்களுக்கு மாற்றப்ட்டவர்கள் குறித்த எந்த தகவல்களும் இப்போது இல்லை. இப்படி இடம்பெயர்ந்து வந்த மக்களை பல வழிகளில் பிரித்துவிட்டு தனது அழிப்பு வேலையை முடக்கிவிட்டது சிறிங்கா அரசு. விசாரணை என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை கைது செய்வதும் பின் “அவர்கள் கைது செய்யப்படவில்லை” “நாங்கள் அவர்களை காணவே இல்லையே” என்று சொல்வதுமாய் பல சம்பவங்கள் நடந்தேறியது இந்த முட்கம்பி முகாம்களில். முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வந்த நண்பனொருவனோடு பேசும் போது முகாமிற்குள் நடக்கும் பல வன்முறைகள் பற்றி சொன்னான்.

ஒரு நாள் இரவு கடும் வெட்கையாக இருந்ததால் தான் நீர்த்தொட்டியடிக்கு சென்றதாகவும் அப்போது இரண்டு கொட்டகைகள் கழித்து ஒரு கொட்டகையில் அழுகுரல் கேட்டதாகவும் தான் குளிக்கும் நீர்த்தொட்டியை மறைத்து கட்டப்பட்டிருந்த கிடுகுவேலிக்குள் ஒழிந்து நின்றதாகவும் அந்த நேரம் அந்த கொட்டகைக்குள் இருந்து ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய இரண்டு படையினர் கையை பிடித்து கொண்டு சென்றதாகவும் சொன்னான். ஆனால் கொண்டு செல்லப்பட்ட பெண் யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களிடம் விசாரிக்க முடியாதெனவும் அப்படி விசாரித்தால் தனக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும் சொன்னான். இப்படி முகாம்களுக்குள் நடந்தேறிய பல வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் வெளி உலகிற்கு தெரியவரவில்லை.

ஒருதடவை சிறிலங்கா துணைராணுவக் குழுவொன்றால் முகாமிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட இரண்டு தமிழ் பெண்கள் இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்ட் நிலையில் அவர்கள் முகாமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்ற அந்த துணைராணுவக் குழு சிறிலங்கா புலனாய்வு படையதிகாரிகளுடன் இணைந்து அவர்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

இந்த தகவலை தமக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துள்ளனர் அந்த யுவதிகள். நீதி கேட்டு முறையிட எந்த இடமும் இல்லாமலும் மீறி வெளியுலகத்திற்கு நடந்தஇ நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் அதனால் தமது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலாலும் பல உண்மைகள் வெளிப்படாமல் இந்த மக்களுக்குள் புதைந்து கிடக்கிறது. போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளும் உலகத்தின் பார்வையும் சிறிலங்கா அரசானது ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்துள்ள இனப்படு கொலையானது இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மேல் மேற்கொள்ளப்ட்ட மினப்பெரிய படுகொலை நிகழச்சி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறிவருகிறது என்பதே இந்த ஜ.நா நிபுணர்குழு அறிக்கை.

உலகத்தின் ஓர் மூலையில் நடந்தேறிய மிகப்பெரிய படுகொலையின் ஆதாராங்களை திரட்டி பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பியதில் சனல்4 மற்றும் அல்ஜசீரா ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது என்றே கூறலாம். கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்தியாவின் ஊடகங்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடாத்திய படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வெளி அழுத்தங்கங்கள் அதிகரிக்கவே பெயரளவில் ஜ.நா செயலாளரால் உருவாக்கப்ட்ட நிபுணர்குழு சில விடையங்களை மிக தெளிவாக ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. பாரபட்சமற்று வெளிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையானது சிறிலங்காவிற்கு பலவழிகளிலும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நிபுணர்குழு அறிக்கையானது முழுமையானதல்ல என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பமே. இந்த நல்ல ஆரம்பத்தினூடாக எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூய சந்தர்ப்பம் பிறந்துள்ளது.

போர்ப்பிரதேசத்தில் நடந்த சில குற்றங்களை மட்டுமே பேசியுள்ள நிபுணர்குழு அறிக்கை போர்க்காலங்களில் கைது செய்யப்ட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றி பேசவேயில்லை என்றேபடுகிறது. ரகசிய முகாம்களில் சிறைவைக்கப்ட்டவர்கள் குறித்த வாதங்களை இந்த நிபுணர்குழு வைக்கவில்லை என்றே தெரிகிறது. தவிர 40 000 ற்கும் அதிகமாவர்கள் இறுதிக்கட்ட போரில் கொல்லப்ட்டிருக்கலாம் என கூறியிருக்கும் நிபுணர்குழு அறிக்கை அதை இனப்படுகொலை என்ற சொல்லினூடாக வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியுள்ளது. பிராந்திய வல்லாதிக்கங்களின் மீது ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே “இனப்படுகொலை” என்ற சொல்லாடலை நிபுணர்குழு தவிர்த்திருப்பதாக தெரிகிறது.

மேற்குலகினால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான ராஜதந்திர முரண்பாடுகள் மற்றும் போர்க்குற்ற நிலைப்பாடு தொடர்பான பனிப்போரும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்தியா வெகுவாகவே நம்பி இருந்தது. அதனால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்பாக எழுத்த அத்தனை அழுத்தங்களையும் போர்க்காலத்தில் சமாளித்து சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரை விரைவுபடுத்தியிருந்தது இந்தியா.

தனது முகவர்கள் ஊடாக தமிழினத்தின் மீதான போரை கண்காணித்து கொண்டிருந்த இந்தியா தொழினுட்ப மற்று சிறப்பு படைப்பிரிவின் உதவியையும் நேரடியாக சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. அது போக போர் தொடர்பான சில கட்டளைகளையும் தனது முகவர்களினூடாக சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது. இதன் வெளிப்பாடாகவே போர் முடிந்தவுடன் ஒரு செவ்வியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ “நாங்கள் இந்தியாவின் போரையே செய்து முடித்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.

இப்படி இந்தியாவின் மேற்பார்வையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்து முடித்துவிட்ட சிறிலங்கா ராஜதந்திர ரீதியில் இந்தியாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. போர் முடிந்த கையுடன் போர்க்குற்றவாளி என்ற பெயரில் மகிந்தவை கூண்டில் ஏற்றிவிட்டு இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பெரிதும் தீர்மானித்திருந்ததாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைவிட பல போர்க்குற்ற ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகலுவம் சொல்லப்படுகிறது.

இந்திய அரசு சிறிலங்காவிற்கு போர்க்காலத்தில் வழங்கிய கட்டளைகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை சிறிலங்கா அரசு வைத்திருப்பதாகவும் இந்திய அரசு சிறிலங்கா மீது போர்க்குற்ற குற்றச்சாட்டை வைக்குமிடத்து தமிழினப்படுகொலையில் இந்தியாவிற்கிருக்கும் பங்கை சிறிலங்கா வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தினாலையே இந்தியா இன்று சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருப்பினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்தியா தொடரந்து இருக்கவிரும்புமா என்பது சந்தேகத்திற்குரியதே.

சிறிலங்காவிற்கெதிரான போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களுக்கெதிராய் இந்தியா செயற்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும. புலம்பெயர்தமிழர்களின் போராட்டங்களின் வெற்றியும் தொடரந்து செய்ய வேண்டியவையும் சிறிலங்கா மீது மேற்குலகத்தின் பார்வையை இயன்ற அளவு தெளிய வைத்ததோடு கடும் தொனியிலான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வைத்ததில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பென்பது அழப்பரியது.

சிறிலங்கா அரசுக்கெதிரான பிரச்சாரங்கள் போர்க்குற்றங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தமை அரசியல் அதிகாரிகளை தெளிவடைய வைத்தமை இப்படி புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை செய்த போராட்டங்களின் ஒரு பலன்தான் இந்த ஜ.நா அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது. இந்திய புலனாய்வு துறையினரின் கண்காணிப்பு சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இப்படி பல தடைகளை வென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் நகர்ந்து இன்று ஜ.நா அறிக்கை வெளியிடக்கூடிய அழுத்தங்ளை பிரயோகிக்க கூடிய பெரும் சக்தியாக வளர்ந்து நிக்கிறது.

ஓன்றுபட்ட தமிழினமாய் புலம்பெயர்தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசியல் ரீதியான விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட இனப்படுகொலையில் படுகொலை செய்யப்ட் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

ஓன்று திரண்ட மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் உணர்த்துவோம்…. தமிழினமாய் எல்லோரும் ஒன்றுபடுவோம் தமிழர்களே.
நன்றி... tamilstar.net

" அன்னையர் தினம் "


உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதாவது, அமெரிக்கா நாட்டின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தை சேர்ந்த அன்னா எம்.ஜர்விஸ் என்ற பள்ளி ஆசிரியை, தனது தாயார் மறைவுக்கு பிறகு, அவரது தியாகத்தை நினைத்து அன்னையர் தினம் கொண்டாட விரும்பினார். அன்னையர் தினத்தின் அவசியத்தையும் ஆட்சியில் இருந்தவர்களுக்கு கடிதம் மூலம் எழுதினார்.
இந்த நிலையில், அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக அன்னா ஜார்விஸ், தனது தாயாருக்கு பிடித்த பூ, அலங்கார பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, தான் செல்லும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களிடம் அதை வழங்கி தங்கள் வீடுகளுக்கு சென்று தாயாரிடம் வழங்கி கவுரவிக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து அன்னையர் தினம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய தொடங்கியது. 1914 ம் ஆண்டு மே மாதம் 8 ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், ஆண்டுதோறும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும் அறிவித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அதே உற்சாகத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினம் வருகிறது. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் தாய்க்கு வாழ்த்து அட்டைகள், மோதிரம், பரிசு பொருட்கள் என்று வாங்கிக் கொடுத்து அசத்துவதில் ஆர்வமாக உள்ளனர்.